ஆட்டத்திற்கு நாங்க வரலாமா? காளைகளுக்கு இடையே சுற்றிய நாய்.. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சுவாரசியம்
மதுரை: அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியின் போது சில சுவாரசிய நிகழ்வுகளும் அரங்கேறின. குறிப்பாக, ஜல்லிக்கட்டு போட்டிகள் விறு விறுப்பாக நடைபெற்றுக் கொண்டு இருந்த போது மைதானதிற்குள் நாய் ஒன்று புகுந்தது சுவாரசியத்தை ஏற்படுத்தியது.
ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின் போது மதுரை மாவட்டத்தில் 3 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். அந்த வகையில், மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டிகள் மாலை 5 மணி வரை நடைபெற்றது. மொத்தம் 10 சுற்றுக்களாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன.

வாடிவாசலில் இருந்து சீறிபாய்ந்து வந்த காளைகளை திமிலை படித்து காளையர்கள் அடக்கினர். ஜல்லிக்கட்டு போட்டியை காண வெளிநாட்டில் இருந்து கூட சுற்றுலாப்பயணிகள் வருகை தந்து இருந்தனர். பொதுமக்கள் கூட்டமும் அதிக அளவில் இருந்தது. களத்தில் காளைகளை பிடிக்க தயாராக இருந்த வீரர்களுக்கு சில காளைகள் தண்ணி காட்டி விட்டு சென்றன. காலையில் இருந்தே விறுவிறுப்புக்கு கொஞ்சமும் பஞ்சம் இன்றி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
உள்ளே புகுந்த நாய்: போட்டியில் 17 காளைகளை அடக்கிய அவனியாபுரத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் என்பவருக்கு தமிழக முதல்வர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. அமைச்சர் மூர்த்தி, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ஆகியோர் கார் சாவியை பரிசளித்தனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற கார்த்திக் இந்த ஆண்டு முதல் பரிசை தட்டிச்சென்றார்.
அதேபோல களத்தில் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய கார்த்தி என்பவரது காளை முதலிடம் பிடித்தது. அந்தக் காளையின் உரிமையாளர் கார்த்தி என்பவருக்கு கார் பரிசளிக்கப்பட்டது. இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது சில சுவாரசிய நிகழ்வுகளும் அரங்கேறின. குறிப்பாக, ஜல்லிக்கட்டு போட்டிகள் விறு விறுப்பாக நடைபெற்றுக் கொண்டு இருந்த போது மைதானதிற்குள் நாய் ஒன்று உள்ளே புகுந்தது.
அசராமல் அங்கேயே நின்ற நாய்: வீரர்கள் காளைகளை அடக்கி தங்கள் வீரத்தை வெளிப்படுத்தியதை ஹாயாக படுத்துக் கிடந்த நாய், சில நேரங்களில் அங்கும் இங்கும் ஓடி இடைஞ்சலும் கொடுத்தது. ஓரமாக படுத்துகிடந்த போது சில காளைகள் சீறி நாயை நோக்கி ஓடிவந்தன. ஏம்பா நான் பாட்டுக்கு செவனேன்னு என்றுதானே இருக்கான்.. என்னை ஏன் இடஞ்சல் பண்ணுறீங்க என்பது போல எழுந்து நகர்ந்து சென்றது.
ஆனாலும் மைதானத்திலேயே வெகு நேரமாக கிடந்த நாய் போட்டியை கண்டுகளித்துக் கொண்டு இருந்தது. ஓடி வரும் காளைகளுக்கும் வீரர்களுக்கும் இடையூறாக இருந்ததால் நாயை அங்கிருந்த பார்வையாளர்கள் சிலர் சத்தம் போட்டு விரட்டி விட முயன்றனர். ஆனாலும் அசராத அந்த நாய் அங்கேயே சுற்றி வந்தது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications