ஆணவ படுகொலை அதிமுக ஆட்சியில் மட்டும்தான் நடக்கிறதா?... திருமாவளவன் நறுக் பதில்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஆணவ படுகொலை அதிமுக ஆட்சியில் மட்டும்தான் நடக்கிறதா? - திருமாவளவன்

    மதுரை: அதிமுக ஆட்சியில் மட்டும்தான் ஆணவ படுகொலை நடைபெறுகிறது என்று குற்றம் சாட்ட விரும்பவில்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

    மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: மத்திய அரசின் திட்டமானது மக்களுக்கு ஏற்புடையதாக உள்ளதா என்பதை கேட்டறிந்து அவற்றை அமல் படுத்த வேண்டுமே தவிர அவர்களிடத்தில் திணிக்கக்கூடாது.

    Dont want to be accused of Massacre only in the AIADMK regime Says Thirumavalavan MP

    ஒட்டுமொத்த தமிழகமே 8 வழிச் சாலை திட்டத்தை எதிர்க்கும் நிலையில், தமிழக முதல்வரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம் என்றார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ஆட்சியில் மட்டும்தான் ஆணவ படுகொலை நடைபெறுகிறது என்று குற்றச்சாட்டு கூறவில்லை.

    இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் தொடர்ந்து இது போன்று, நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் இதை தடுப்பதற்குரிய முயற்சியை ஈடுபட வேண்டும் என்பது தான் கோரிக்கையாக உள்ளது.

    சாதிய, மதவாத கட்சிகளின் காரணங்களால் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. தமிழக அரசு சுதந்திரமாக செயல்பட வில்லை என்பதும் மத்திய அரசின் கெடுபிடியால், இக்கட்டான நிலையில் தமிழக அரசு தவிக்கிறது என்பதையும் உணர முடிகிறது என்றும் கூறினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+