9 வயது சிறுமி.. நடுரோட்டில் அடித்து மிதித்து.. டியூப் லைட்டால் தாக்கிய தந்தை.. மதுரையில் ஷாக்!

9 வயது மகளை குடிகார தந்தை அடித்து உதைத்த வீடியோ வைரலாகி வருகிறது

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    9 வயது சிறுமியை நடுரோட்டில் அடித்து மிதித்து தாக்கிய தந்தை

    மதுரை: 9 வயது பிஞ்சு மகளை நடுத்தெருவில் இழுத்து போட்டு, கண்மூடித்தனமாக அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளார் அரக்க குணம் கொண்ட பெற்ற தந்தை! இது சம்பந்தமான சிசிடிவி காட்சி வெளியாகி தமிழக மக்களை கடுமையான அதிர்ச்சிக்கும், அதிருப்திக்கும் உள்ளாக்கி வருகிறது.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் கொடிமரத் தெருவில் வசித்து வரும் தம்பதி அப்துல்சமது - மும்தாஜ் இவர்களுக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர்.

    அப்துல் சமது ஒரு கூலி தொழிலாளி.. வயது 35 ஆகிறது.. நாளடைவில் அந்த கூலி வேலைக்கும் போவது கிடையாது.. எப்பவுமே போதையில் மிதந்து கொண்டே இருப்பார்.. மிச்ச நேரம் மனைவியிடம் தகராறு செய்து அடித்து உதைத்து கொடுமைப்படுத்துவார்!

    மும்தாஜ்

    மும்தாஜ்

    இப்படித்தான் போன மாதம் ஒருநாள் நடந்த சண்டையில், மும்தாஜை சரமாரி அடித்துவிடவும், அவர் வலி பொறுக்க முடியாமல், "என்னை காப்பாத்துங்க" என்று அலறி கொண்டு வேறு ஒரு தெருவில் வசிக்கும் தன் சொந்தக்காரர் வீட்டிற்கு ஓடினார். அப்போது இரு மகள்களும் அம்மாவுடனே செல்ல முயன்றனர். ஆனால், அவர்களை தடுத்து நிறுத்தி தன்னுடனே வைத்து கொண்டார் அப்துல்சமது.

    9 வயது மகள்

    9 வயது மகள்

    அதேபோல, உறவினர்களும், மும்தாஜை வீட்டுக்கு அனுப்பினால், திரும்பவும் கணவன் அடித்து நொறுக்குவார் என்பதால், தங்களுடனே வைத்து கொண்டனர். இந்நிலையில் 9 வயதான மூத்த மகள், சாயங்காலம் ஸ்கூல் முடிந்து திரும்பி வரும் வழியில் தன் அம்மாவை பார்த்து விட்டு வந்திருக்கிறாள். இந்த விஷயம் அப்துல் சமதுக்கு தெரிந்துவிட்டது. அதனால், "உங்க அம்மா எங்கே இருக்கா, யார் வீட்டில் இருக்கிறா? மரியாதையா சொல்லிடு" என்று கேட்டு 9 வயது குழந்தையை போட்டு அடித்துள்ளார்.

    டியூப்லைட் - செருப்பு

    டியூப்லைட் - செருப்பு

    இதில் அவளுக்கு வலி தாங்க முடியாமல், வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடிவந்தாள்.. ஆனால் அப்துல் பின்னாடியே அவளை துரத்தி கொண்டு வந்து தெருவிலேயே இழுத்து போட்டு அடித்தார்.. டியூப் லைட்டை எடுத்து அவள் மீது போட்டு தாக்கினார்.. செருப்பை கழட்டி அந்த பிஞ்சு உடம்பில் வெளுத்து வாங்கினார்.. இன்னும் கையில் கிடைத்ததையெல்லாம் எடுத்து அவள் மீது வீசினார்.. போதை தலைக்கேறி அப்துல் அடித்த அடியில், அந்த குழந்தை தெருவிலேயே சுருண்டு விழுந்துவிட்டாள்.

    சித்திரவதை

    சித்திரவதை

    அப்போதும் ஆத்திரம் தீராத தந்தை, குழந்தையை காலால் மிதித்து சித்ரவதை செய்தார். அந்த தெருவே இதை பார்த்து அலறிவிட்டனர்.. ஒருசிலர் இதை தட்டிக் கேட்க முயன்றனர், ஆனால், அவர்களையும் அப்துல் சமது அடிக்க பாய்ந்தார்.. அசிங்க அசிங்கமாக பேசினார்.. ஒரு கட்டத்துக்கு மேல் குழந்தை அடிவாங்குவதை சகித்து கொள்ளாத அந்த தெரு மக்கள், எல்லோரும் ஒன்றுகூடி அப்துல் சமதை தாக்க முயன்றபோது, அவர் தப்பி ஓடிவிட்டார்.

    புகார்

    புகார்

    20 நிமிடத்துக்கு மேல் நடந்த இந்த கொடூர காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது. பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து திருமங்கலம் நகர் ஸ்டேஷனில் புகார் தந்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.

    கைது

    கைது

    புகாரின் பேரில், சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்த போலீசார், தப்பியோடிய அப்துல் சமதுவை கைது செய்து தூக்கி உள்ளே வைத்தனர். கைது செய்யப்பட்ட அப்துல் சமது மனநலம் பாதிக்கப்பட்டவர் என போலீஸ் விசாரணையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று குழந்தைகள் தினத்தில்.. இப்படி ஒரு பிஞ்சு கொடூரமாக தாக்கப்பட்டதை கண்டு தமிழக மக்கள் நிலைகுலைந்து போய் உள்ளனர்!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+