அதிமுகவை உடைச்சதே பாஜக தான்.. இப்போ பலப்படுத்த போறாங்களாம்.. துரை வைகோ கிண்டல்!
அதிமுக பிளவு விவகாரம் தொடர்பாக பாஜகவின் கருத்தை விமர்சித்துள்ளார் துரை வைகோ.
மதுரை : அதிமுகவை உடைத்ததில் பாஜகவுக்கு பெரும் பங்கு உள்ளது. ஆனால், இன்று பாஜகவினரே, அதிமுகவை பலப்படுத்துவோம் என்று சொல்கிறார்கள் என மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ விமர்சித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய அதிமுக ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் இன்றளவும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், இந்தப் பிரச்சனைக்கு ஒரு 'பாஸ்' பட்டனை அழுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை முன்வைத்து, அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய பொதுக்குழு ஒப்புதல் படிவத்தை ஓபிஎஸ் தரப்புக்கும் அனுப்பியுள்ளது எடப்பாடி பழனிசாமி அணி.

ஓபிஎஸ் அணி ஆலோசனை
இந்நிலையில், இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதா அல்லது எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அனுப்பியுள்ள படிவத்தில் கையெழுத்திடுவதா என்ற ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு. இதற்கிடையே, பாஜகவினர், தாங்கள் வலுவான அதிமுக வேட்பாளரையே ஆதரிப்போம், அதிமுகவை பலப்படுத்துவதே எங்கள் நோக்கம், இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிட வேண்டும் என்ற கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு
மதுரையில் திருமலை நாயக்கரின் 440வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ, "பாரம்பரியம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. அதனால் ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும்.

உடைத்ததே பாஜக
ஆட்சிக் கட்டிலில் இருந்து தமிழ்நாட்டை பல முறை ஆண்ட கட்சியான அதிமுக இன்று இரு பிரிவுகளாகச் செயல்பட்டு வருகிறது. அந்தக் கட்சியை உடைத்ததில் பாஜகவுக்கு பெரும் பங்கு உள்ளது. ஆனால் இன்று பாஜகவினரே அதிமுகவைப் பலப்படுத்துவோம் என்றும் பேசி வருகின்றனர். இது எந்த வகையிலும் நியாயம் இல்லை" என விமர்சித்தார்.

நிரந்தரமாக முற்றுப்புள்ளி
மேலும் பேசிய துரை வைகோ, "அண்மையில் நீதிமன்றம் தமிழ்நாட்டில் புகையிலை, குட்காவிற்கான தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யும் பணிகள் தொடங்கி உள்ளது. விரைவில் தமிழ்நாட்டில் புகையிலை பொருட்களின் பயன்பாட்டிற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும்." எனத் தெரிவித்தார்.
-
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
மிட்நைட்டில் 4%வாக்குப் பதிவு? 'ஆந்திரா' பாணியில் தேர்தல்? எச்சரித்த நிர்மலா கணவர் -
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஒரு சோர்ந்துபோன கூட்டணி.. புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
செருப்பு போடாதவர்.. 75 வயதில் முதல்முறை எம்எல்ஏ.. யார் இந்த நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி? -
ஊருக்கு முன்பே வேட்புமனு தாக்கல் செய்த தஞ்சை பாஜக நிர்வாகி முரளீதரன்! நயினார் எடுத்த ஆக்ஷன்! -
சர்ப்ரைஸ் வானதி சீனிவாசன்.. நோஸ் கட் அண்ணாமலை.. 2021 தேர்தல் பாஜக பிளாஷ்பேக் -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
கோவை வடக்கில் வானதி சீனிவாசன் களம்: யார் இவர்? 2026 தேர்தலில் மீண்டும் கவனம் ஈர்க்கும் பாஜக முகம் -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications