அங்கித் திவாரி கைது எதிரொலி.. வேறு சில ED அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்பு துறை திட்டம்?
மதுரை: லஞ்சம் வாங்கிய அமலாக்கத் துறை அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாகக் கூடுதல் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் சுரேஷ் பாபு என்பவர் மீது ஏற்கனவே அமலாக்கத் துறை வழக்கு இருந்துள்ளது. இருப்பினும், அந்த வழக்கு முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் சுரேஷ் பாபு அந்த வழக்கைச் சொல்லி மிரட்டியுள்ளார், பிரதமர் அலுவலகத்தில் இருந்து அந்த வழக்கை விசாரிக்கச் சொல்லியுள்ளதாகவும் மிரட்டியுள்ளார்.
லஞ்சம்: இந்த வழக்கை முடிக்க 3 கோடி ரூபாய் லஞ்சம் வேண்டும் என அவர் கேட்டுள்ளார். இருப்பினும், அதற்கு டாக்டர் சுரேஷ் பாபு ஒத்துக்கொள்ளவில்லை. அதன் பிறகு சில காலம் கழித்து மீண்டும் அவரை தொடர்பு கொண்ட அங்கித் திவாரி, உயர் அதிகாரிகளிடம் பேசிவிட்டதாகவும் 51 லட்ச ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இதையடுத்து வேறுவழியின்றி டாக்டர் சுரேஷ் பாபு கடந்த மாதம் ரூ 20 லட்சம் லஞ்சம் அளித்துள்ளார்.
அமலாக்க துறை அதிகாரியை விஜிலென்ஸ் கைது செய்ய அதிகாரம் இருக்கா? மதுரை ED அதிகாரி கைதால் பரபரப்பு
இருப்பினும், மீதி 31 லட்சம் லஞ்சப் பணத்தை அளிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் அங்கித் திவாரி பல முறை டாக்டர் சரேஷ் பாவுவை மிரட்டியுள்ளார். இதனால் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசில் இது தொடர்பாகப் புகார் அளித்திருக்கிறார். லஞ்ச ஒழிப்புத் துறை அளித்த ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூ. 31 லட்சத்தை டாக்டர் சுரேஷ் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் அளித்துள்ளார்.
கைது: அதை வாங்கிக் கொண்டு அங்கித் திவாரி அங்கிருந்து தப்ப முயன்ற நிலையில், சுமார் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை விரட்டிச் சென்று பிடித்தனர். சுமார் 15 கிமீ மேல் விரட்டி சென்று அவரை பிடித்துள்ளனர். லஞ்ச ஒழிப்புத் துறையைப் பார்த்ததும் சாலையில் இருந்து காரை இறக்கித் தப்ப முயன்றதாகவும் இருப்பினும் லஞ்ச ஒழிப்புத் துறை பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அங்கித் திவாரியிடம் பல மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
அவரிடம் சுமார் 15 மணி நேரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தினர். மேலும், அவர் வேலை செய்து வந்த மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் சோதனையும் நடத்தினர். இதற்கு அங்கிருந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் முதலில் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பின்னர் அங்கித் திவாரி வேலை செய்த இடத்தில் மட்டும் சோதனை நடத்தப்பட்டது. விடிய விடிய நடந்த சோதனை காலை நிறைவடைந்தது.
சம்மன் அனுப்ப திட்டம்: இந்த சோதனையில் என்ன கைப்பற்றப்பட்டது என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது ஒரு பக்கம் இருக்கக் கைதான அங்கித் திவாரி திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்ட நிலையில், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதில் மற்ற அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த விவகாரத்தில் மற்ற லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்புத் துறை முடிவு செய்துள்ளதாகப் பரபர தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications