சிட்டிக்குள் வேண்டாம்! எடப்பாடி போட்ட கண்டிஷன்! அவுட்டரிலேயே ரூம் புக்கிங்! அதிமுக மாநாடு சுவாரஸ்யம்
மதுரை: அதிமுகவின் வீர எழுச்சி மாநாடு வரும் 20ஆம் தேதி மதுரையில் நடைபெறும் நிலையில் அதில் பங்கேற்க செல்லும் எடப்பாடி பழனிசாமி நகருக்குள் தங்குவதை தவிர்த்து புறநகரில் உள்ள 4 நட்சத்திர விடுதியில் தங்குகிறார்.
பசுமலை தாஜ், கோர்ட்யார்ட் மேரியட், போன்ற நட்சத்திர விடுதிகளில் எடப்பாடி பழனிசாமி தங்குவார் என எதிர்பார்த்த நிலையில் அவருக்கு அமிகா என்ற 4 நட்சத்திர விடுதியில் ரூம் புக் செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இந்த விடுதியானது மதுரை விமான நிலையத்திற்கு மிக அருகாமையில் இருப்பதும், மாநாடு திடலுக்கு பக்கத்தில் இருப்பதுமே ஆகும்.

இதனால் தான் சிட்டியை தவிர்த்து அவுட்டரில் உள்ள இந்த விடுதியை எடப்பாடி பழனிசாமிக்காக உள்ளூர் நிர்வாகிகள் தேர்வு செய்துள்ளனர். அதேபோல் அன்றைய தினம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்டோரும் அதே விடுதியில் தான் தங்குகின்றனர்.
முன்னதாக சனிக்கிழமை காலையே எடப்பாடி பழனிசாமி மதுரை வந்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தனக்கான உணவு மெனுவில் நான் வெஜ் உணவுகளையும் எடப்பாடி பழனிசாமி தவிர்க்கச் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாநாடு மிகப் பெரிய மாற்றத்தை நிகழ்த்திக் காட்டும் என நம்பும் அவர் மாநாடு பெரும் வெற்றி அடையும் என நம்பிக்கை கொண்டிருக்கிறார். அதிமுகவுக்கு தலைமை தாங்க தொடங்கிய பிறகு எடப்பாடி பழனிசாமி நடத்தும் முதல் மாநாடு மதுரை மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.
அதில் என்னென்ன பேச வேண்டும் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமிக்கு தனி டீமே உரை தயார் செய்துகொண்டிருக்கிறது. உள்ளூர் அரசியல் முதல் இந்தியா கூட்டணி உட்பட தேசிய அரசியல் வரை பேசும் வகையில் எடப்பாடியின் உரை அமையும் எனத் தெரிகிறது.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி!












Click it and Unblock the Notifications