பதவி வாங்க யார் பின்னாலும் செல்வார் ஒபிஎஸ்... மீண்டும் வம்பிழுத்த தங்க தமிழ்ச்செல்வன்
மதுரை: பதவி வாங்க யார் பின்னாலும் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் செல்வார் என்றும் அவருக்கு கொள்கை கோட்பாடு என்று எதுவும் இல்லை என்றும் அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் குற்றம்சாட்டினார்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் அமமுக சார்பில் உசிலம்பட்டியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ மகேந்திரன் போட்டியிடுகிறார்.

இதற்காக திருப்பரங்குன்றத்தில் அமமுக சார்பில் தேர்தல் பிரச்சார அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் திறந்துவைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அமமுக தான் உண்மையான அதிமுக. ஓ.பி.எஸ், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தேர்தலில் வேலை பார்த்தவர். சந்தர்ப்பவாத அரசியல்வாதி. அவரை நம்பி வந்தவர்களுக்கு ஒன்றும் செய்ததில்லை. மகனுக்கும் மட்டும் தான் செய்தார்.
ஒபிஎஸ்க்கு கொள்கை கோட்பாடு என்று எதுவும் கிடையாது. பதவி வாங்க யார் பின்னாலும் அவர் செல்வார். ஓ.பி.எஸ், நிச்சயம் பி.ஜே.பி பக்கம் போய்விடுவார்" இவ்வாறு கூறினார்.
முன்னதாக ஒபிஎஸ் தங்க தமிழ்ச்செல்வனுக்கு பதில் அளிக்கும் வகையில், ஒரு நாளும் பாஜகவுக்கு செல்ல மாட்டேன். அவதூறான கருத்து என விளக்கம் அளித்தார். அதையும் கிண்டல் செய்த தங்கதமிழ்செல்வன், எனக்கு பதில் சொல்ல மாட்டேன், சொல்ல மாட்டேன் என்று சொல்லிவிட்டு, ஒருவாரமாக எனக்கு தான் அவர் பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறார் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications