மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்சூட்ட நடவடிக்கை.. எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி
திண்டுக்கல்: மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைப்போம் என்றும் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் பேசுகையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும்.

அதனை பெறுவதற்கான அத்தனை முயற்சிகளையும் அதிமுக எடுக்கும். அதேபோல் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை வைக்க அதிமுக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று தெரிவித்துள்ளார். இதே கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது மு.க.ஸ்டாலினும் ஒருமுறை வைத்தார்.
தற்போது எடப்பாடி பழனிசாமியும் வைத்திருக்கிறார். 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை அறிவித்தார். அது முக்குலத்தோர் சமூக மக்களிடையே எதிர்ப்பை சந்தித்தது. இதனால் அந்த தேர்தலில் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு பெரியளவில் வாக்கு சதவிகிதம் குறைந்தது.
அதன் தாக்கம் நாடாளுமன்றத் தேர்தலின் போதும் இருந்தது என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, நெல்லை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுக 2வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அதேபோல் எடப்பாடி பழனிசாமிக்கும் முக்குலத்தோர் சமூக மக்கள் மத்தியில் பெரிய ஆதரவு மனநிலை இல்லை. தேவர் ஜெயந்தியின் போது அவர் பசும்பொன் வருவதை தவிர்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் திடீரென மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என்றும், முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத் ரத்னா விருது கொடுக்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதியாக கொடுத்துள்ளார். இதனால் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.
முக்குலத்தோர் சமூக மக்களின் ஆதரவை பெறுவதற்காக எடப்பாடி பழனிசாமி இந்த தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் பெரியளவில் தொழிற்சாலைகள் இல்லாத நிலையில், அது தொடர்பான வாக்குறுதியை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. வளர்ச்சிக்கான வாக்குறுதிகளை தென் மாவட்ட மக்களுக்காக அறிவிப்பார் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் மீண்டும் எதிர்க்கட்சியாக இருந்த போது ஸ்டாலின் வைத்த கோரிக்கையை தூசு தட்டி, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறார். இதனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுகள் தென் மாவட்ட மக்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்! -
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்! -
வீட்டிற்குள்ளேயே முடங்கிய விஜய்.. இவரை நம்பி போட்ட பிளான் எல்லாம்.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்! -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
சுருண்டு விழுந்த சூரியன்! 91இல் வீசிய ‘ராஜீவ்’ அலை.. 2 வருடத்தில் ’நேஷனல் லீடர்’ ஆன ஜெயலலிதா -
கிராமங்கள் vs நகரங்கள்.. 2021 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவின் செயல்பாடுகள் எப்படி? -
புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தில் அதிமுக பங்கு கேட்கும்.. மாநில செயலாளர் திட்டவட்டம்!












Click it and Unblock the Notifications