மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நயினார் வாங்கி கட்டிக் கொண்டாரே தெரியுமா.. தேவையில்லாமல் அண்ணாமலை பேசறார்.. எகிறும் செல்லூர் ராஜு

நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலை குறித்து செல்லூர் ராஜு பேசியுள்ளார்

Google Oneindia Tamil News

மதுரை: ஏற்கனவே, நயினார் நாகேந்திரன் பேசியதற்கு எப்படி வாங்கி கட்டி கொண்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்... இது பெரியார், அண்ணா உருவாக்கிய திராவிட பூமி... தமிழக வளர்ச்சியுடன் இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநிலமும் போட்டியிட முடியாது... பாஜகவின் அளவுகோல் என்ன என்பது அண்ணாமலைக்கு நல்லாவே தெரியும். தேவை இல்லாமல் அண்ணாமலை ஏதாவது இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார்... அவருக்கு நிறைய நப்பாசை" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

சொந்த கூட்டணி கட்சியையே சீண்டி உள்ளுக்குள்ளேயே புகைச்சலை அதிகரித்துவிட்டதாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மீது இன்னமும் கோபம் உள்ளது..

பிற்பகல் 3 மணி நிலவரம்.. உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் 49.24 சதவீதம் வாக்குகள் பதிவு! பிற்பகல் 3 மணி நிலவரம்.. உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் 49.24 சதவீதம் வாக்குகள் பதிவு!

அன்று நயினார் பேசிய பேச்சு, அதிமுகவுக்கு எரிச்சலையே கிளப்பியது.. நயினாரா அப்படி பேசியதால் அன்று அதிர்ச்சியிலும் ஆழ்ந்தது.. இதுவரை அதிமுக மேலிடத்திலிருந்து நாகேந்திரனின் பேச்சுக்கு எவ்வித கண்டனமும் வரவில்லை என்றாலும், நிர்வாகிகள் பலர் அவருக்கு எதிராக புகார் கொடுத்து வருகின்றனர்...

 ஆண்மை இருந்தால்..?

ஆண்மை இருந்தால்..?

உண்மையிலேயே ஆண்மை இருந்தால் பாஜகவினர் தனித்து போட்டியிடட்டும்... நயினார் நாகேந்திரன் பாஜக சார்பில் தனித்து போட்டியிட்டு முடிந்தால் சட்டசபைக்கு செல்லட்டும் என்று அதிமுகவினரே பலரும் சவால் விடுத்து வந்ததாக கூறப்பட்டது.. இதன் விளைவு, உண்மையிலேயே பாஜக தனித்து போட்டியிட போகிறது.. பேச்சுவார்த்தை தோல்வியால் அதிமுக ஒரு பக்கம் பாஜக மறுபக்கம் என களத்தில் உள்ளன.. இதற்கு நயினார் பேசிய பேச்சு காரணம் இல்லை என்று பாஜக - அதிமுக கட்சியை சேர்ந்த தலைவர்களே சொன்னாலும், அதுதான் முக்கிய காரணமாக இப்போதுவரை கட்சிக்குள் சலசலக்கப்பட்டு வருகிறது.

 மாஜி அமைச்சர்

மாஜி அமைச்சர்

இந்நிலையில், மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ நயினார் நாகேந்திரன் பற்றி பேட்டி தந்துள்ளார்.. அதில், நயினார் மீதான கோபத்தையும், அண்ணாமலை மீதான அதிருப்தியையும் லேசாக வெளிப்படுத்தி உள்ளர்.. மதுரையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நாளை மாலை 5 மணிக்கு பழங்காநத்தம் பகுதியில் பிரச்சாரம் செய்கிறார். அதற்கான முன்னேற்பாடு பணிகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் பார்வையிட்டனர்.

 செல்லூர் ராஜு

செல்லூர் ராஜு

இதற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செல்லூர் ராஜு, "குடும்ப பெண்களுக்கு 1000 ரூபாய் கொடுப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்தில் சொல்கிறார். ஆனால், திமுக சொன்னதை செய்ததாக வரலாறே இதுவரை இல்லை... பொங்கலுக்கு வழக்கமாக வழங்கப்படும் வேஷ்டி சேலையையே இன்னும் தரவில்லை.. அதை முதலில் கொடுக்க சொல்லுங்கள்... மக்களை ஏமாற்ற என்ன செய்ய முடியுமோ அதை முதல்வர் செய்து கொண்டிருக்கிறார்.

 முக ஸ்டாலின்

முக ஸ்டாலின்

திமுக ஆட்சியின் மீது மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.. சிறுபான்மை மக்களின் ஆதரவும் அதிமுகவிற்கு இப்போது அதிகமாக இருக்கிறது.. திமுகவிற்கு வாக்களித்து செய்த தவறுக்கு பரிகாரம் செய்யும் வகையில் மக்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கிறார்கள்.. இந்த தேர்தல் திமுக - பாஜக இடையே நடக்கிறது என்று அண்ணாமலை சொன்னது குறித்து கருத்து கேட்கிறீர்கள்.. பாஜகவின் அளவுகோல் என்ன என்பது அண்ணாமலைக்கு நல்லாவே தெரியும். உள்ளாட்சி தேர்தல் முடிவு பாஜகவிற்கு பாடம் கற்பிக்கும்... தேவை இல்லாமல் அண்ணாமலை ஏதாவது இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார்... அவருக்கு நிறைய நப்பாசை..

அண்ணாமலை

அண்ணாமலை

ஏற்கனவே, நயினார் நாகேந்திரன் பேசியதற்கு எப்படி வாங்கி கட்டி கொண்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்... இது பெரியார், அண்ணா உருவாக்கிய திராவிட பூமி... தமிழக வளர்ச்சியுடன் இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநிலமும் போட்டியிட முடியாது... அண்ணாமலை என்ன பேசினாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள். ஆளுகிற பொறுப்பை திராவிட இயக்கத்திற்குதான் மக்கள் கொடுப்பார்களே தவிர, பாஜகவிற்கு அளிக்க மாட்டார்கள்.. ஆனால், கொள்கை என்பது வேஷ்டி மாதிரி... கூட்டணி என்பது துண்டு மாதிரி.. தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுபடும்...

 பிரதமர் மோடி

பிரதமர் மோடி

அடுத்த தேர்தலில் மக்களின் மனநிலையை அறிந்து கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து முடிவு செய்வோம்.. பிரதமர் மோடி நினைத்ததை சாதித்துக் கொண்டு இருக்கிறார்... ஒரு நாடு ஒரே தேர்தல் நடைமுறை அமலுக்கு வரும்.. மேற்குவங்கம் போல தமிழகத்திலும் சட்டமன்றம் முடக்கப்படலாம். 4 ஆண்டுகள் தேவையிலை.. இங்கே சீக்கிரமே தேர்தல் வந்து விடும்.. சட்டமன்றத்தை முடக்கும் ஆசை அதிமுகவிற்கு கிடையாது... ஆனால், சட்டம் ஒழுங்கு சரி இல்லாததால் அந்த நிலை வரலாம்" என்றார்.

English summary
Ex Minister Sellur Raju says about Nainar Nagendran and BJP State President Annamalai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X