ஜெயலலிதாவின் அரசியல் மாணவர் தான் எடப்பாடி.. ஒரே போடாக போட்ட செல்லூர் ராஜு.. திமுக மீதும் அட்டாக்
மதுரை: அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்த நிலையில், செல்லூர் ராஜூ சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டம் செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், இதை எடப்பாடி ஆதரவாளர்கள் மாநிலம் முழுக்க கொண்டாடினர்.
அதன்படி மதுரை மாநகர் அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தொண்டர்களிடம் இனிப்பு வழங்கி தீர்ப்பை வரவேற்றார்.

ஜெயலலிதாவிடம்
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, "அதிமுக வெற்றிச் சரித்திரத்தால் மற்றொரு மகுடமாக இந்த சிறப்பான தீர்ப்பைச் சென்னை ஐகோர்ட் வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் அதிமுக தொண்டர்கள் மத்தியில் நிலவிய குழப்பம் முற்றிலுமாக நீங்கி உள்ளது. அதிமுகவின் தற்போதைய இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவிடம் அரசியல் கற்றவர்..

எடப்பாடி
எடப்பாடி பழனிசாமி கட்சித் தொண்டர்களை அரவணைத்துச் செல்வதிலும், கட்சியை வளர்ப்பதிலும் முன்னோடியாக உள்ளார். இது எடப்பாடி பழனிசாமிக்குக் கிடைத்த மகத்தான வெற்றி. அதிமுக குறித்து திமுக கருத்துச் சொல்லத் தேவையில்லை. முரசொலி நாளேடு எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவையே தரம் தாழ்த்தி விமர்சனம் செய்தவர்கள். அதை நம்புபவன் அடிமுட்டாளாகத்தான் இருப்பான்.

அடுத்த முதல்வர்
இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் தமிழகத்தின் அடுத்த முதல்வர். அதிமுக பிரச்சினை குறித்து மட்டுமே பேசி, எப்போதும் அரைத்த மாவையே அரைக்காதீர்கள்!! அது அதிமுகவின் உட்கட்சி பிரச்சினை. நா்கள் பார்த்துக் கொள்வோம். மக்கள் பிரச்சினையைக் குறித்தும் பேச வேண்டும். நகைக்கடன் தள்ளுபடி செய்வேன் எனச் சென்ன திமுகவினர் அதைச் செய்யவில்லை. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் உரிமைத் தொகை எனப் பல வாக்குறுதிகள் அப்படியே உள்ளது" என்றார்.

திமுக மீது தாக்கு
தொடர்ந்து எட்டுவழிச் சாலையில் திமுக நிலைப்பாடு குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அவர், "எதிர்க் கட்சியாக இருந்தால் ஓர் நிலைப்பாடு.. ஆளும் கட்சியாக இருந்தால் ஓர் நிலைப்பாடு என்றேத் திமுக எடுத்து வருகிறது. அன்று போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் இப்போது அகதிகளாக எங்கும் சென்றுவிட்டார்களா அல்ல வாய்மூடி மவுனியாக மாறிவிட்டார்களா??

ஸ்டாலின்
ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது விஜயகாந்த் மாதிரி புள்ளிவிவரத்துடன் அடுக்கடுக்கான குற்றச் சாட்டுகளைக் கூறினார். எடப்பாடி பழனிசாமியிடம் கமிசனுக்காக செய்கிறாரா எனக் கேட்டார். அதையெல்லாம் பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலு மறந்துவிட்டார் என நினைக்கிறேன். ஆளும் கட்சி எங்களைப் பற்றிப் பேசத்தான் செய்வார்கள் பேசவில்லை என்றால்தான் சங்கடப் படவேண்டும்.

மாற்றம் தேவை
100 ஆண்டுகள் கட்சி இருக்க வேண்டுமானால் காலத்திற்கு ஏற்றாற்போல் மாற்றம் செய்வதில் தவறில்லை. நாங்கள் திமுகவைப் போல் வாரிசு அரசியல் செய்யவில்லை, ஜெயலலிதாவுக்குப் பின், சாதாரண தொண்டன் தலைவனாக முடியும். திமுகவில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த தலைமைக்கு வர முடியுமா? அதிமுக ஆட்சியில் தனபால் இருமுறை சபாநாயகராக பணியாற்றினார். கட்சியைக் காப்பாற்ற வழிநடத்த நல்ல கேப்டன் வேண்டும், அப்படி இருந்தால் தான் கட்சியைக் கொண்டு செல்ல முடியும். எனவே தான் எடப்பாடியை கேப்டன் ஆக்கி உள்ளோம்.

செல்லூர் ராஜு
தொடர்ந்து பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசிய செல்லூர் ராஜு, "தமிழக முதல்வரின் கேரள பயணம் வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே இருக்காது என நம்புகிறேன். முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து ஆக்கப் பூர்வமாகத் தீர்வு காண வேண்டும். அப்படிச் செய்தால் 5 மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

கேரள பயணம்
திமுகவுக்கு என ஒரு ரசி இருக்கிறது. அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அணைப் பிரச்சினை தானாக வரும். அதில் அவர்கள் கவனமும் செலுத்த மாட்டார்கள். இந்த நிலைப்பாட்டை அரசு திருத்திக் கொள்ள வேண்டும். முதல்வரின் பயணம் வெற்றிப் பயணமாக அமைய வாழ்த்துகிறேன். கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பேசிய முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு மேல் நீர்த் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
போலீசில் சிக்கிய நடிகை ஜூலி.. மெரினாவில் திமுகவுக்கு ஆதரவு - தவெகவிற்கு எதிர்ப்பு பிரசாரத்தால் வந்த சிக்கல் -
Election Exclusive: வாயில் வாஸ்து சரியில்ல.. ஜெயிச்சாலும் திண்டுக்கல் சீனிவாசனுக்கு சிக்கல்! திமுக போடும் பலே ப்ளான்? -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
ரூ.8,000 கூப்பன்.. திமுகவிற்கு வார்னிங் கொடுத்த தமிழக தேர்தல் அதிகாரி -
ஜெயலலிதா இருந்தவரை வாலை சுருட்டி இருந்தாங்க.. நான் இருந்திருந்தால்.. கண் சிவந்த சசிகலா -
ரூ.5000 + ரூ.8000.. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெண்களை தேடி வரப்போகும் பணம்! -
Election Exclusive: மதுரை மத்தியில் தலைக்கு மேல் கத்தி.. குட்டையை குழப்பும் அழகிரி & கோ! அதிரடி ஆக்ஷனில் இறங்கிய திமுக! -
சேகர் பாபுவை குறிவைத்த ஐடி.. சென்னையை பரபரபாக்கிய சோதனை! திமுக சீனியர்களுக்கு ஸ்கெட்ச் போடும் டெல்லி? -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications