தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு! நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது
மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் ஆகியோர் 5.30 மணிக்குள் ஆஜராகாவிட்டால் கடும் உத்தரவு பிறப்பிக்க தயங்கமாட்டேன் என நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தெரிவித்தார். அதையேற்று, மதுரை மாநகர காவல் ஆணையர் காணொளிக் காட்சி வாயிலாக ஆஜரானார். இதையடுத்து அவரிடம் விசாரித்த நீதிபதி, மலை உச்சியில் தீபத் தூணில் இன்று மாலை 7 மணிக்குள் தீபம் ஏற்றி இரவு 10.30க்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தார். ஆனால் தீபம் ஏற்றப்படாத நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இரவு நடக்கும் என்று சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணை காலை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றக் கூடாது என எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் மதுரை மாநகர காவல் ஆணையர், நீதிபதியின் கேள்விக்கு பதில் அளித்தார்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக உச்சிப் பிள்ளையார் கோயில் முன் தீபம் ஏற்றப்படும். இந்நிலையில், இந்த ஆண்டு மலை உச்சியில் உள்ள தீபத் தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, திருப்பரங்குன்றம் முழுவதும் காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் நேற்று போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் உச்சிப் பிள்ளையார் கோயில் முன்புள்ள தீபத்தூணில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இதற்கிடையே இந்து முன்னணி, பாஜகவினர் மற்றும் பக்தர்கள் திரண்டு தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி கோஷமிட்டபடி, போலீஸாரின் தடைகளை அப்புறப்படுத்தி 16 கால் மண்டபம் வரை முன்னேறினர். அவர்களைத் தடுக்க முயன்ற போலீசாருக்கும், இந்து அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தாவிடம் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்தது.
நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர். மனுதாரர் ராம ரவிக்குமார் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தனி வழக்காக விசாரிப்பார் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.
இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இன்று மீண்டும் விசாரித்தார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். இந்த வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் காணொளிக்காட்சி வாயிலாக ஆஜராக தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். 5.30 மணிக்குள் சம்பந்தப்பட்டவர்கள் ஆஜராகாவிட்டால் கடும் உத்தரவு பிறப்பிக்க தயங்கமாட்டேன் என நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் கோயிலின் செயல் அலுவலர் உடனடியாக காணொலி வாயிலாக ஆஜராக வேண்டும், நீதிமன்றத்தின் மதிப்பு புரிய வேண்டும் என்பதற்காகவே இதனைச் செய்கிறேன் என்றும் தனி நீதிபதி தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாநகர காவல் ஆணையர் காணொளிக் காட்சி வாயிலாக ஆஜராகினார். அவரிடம் தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் கேள்விகளை எழுப்பினார்.
144 தடை உத்தரவு எந்த நேரத்தில் பிறப்பிக்கப்பட்டது, எந்த நேரத்தில் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பினார். பதற்றமான சூழலை கருத்தில் கொண்டு, மாலை 5.45 மணியளவில் 144 தடை உத்தரவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 6.10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் 144 தடை ய்த்தரவு பிறப்பித்தார் என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு காவல் ஆணையர், 3.30 மணி முதல் பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு அளித்தோம், கூட்டம் அதிகமானதும் பதற்ற சூழலை கருத்தில் கொண்டே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும், எங்களது நோக்கம் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கூடாது, மதிக்கக்கூடாது என்பது அல்ல எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, திருப்பரங்குன்றத்தில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவை ரத்து செய்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். மேலும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் இன்று மாலை 7 மணிக்குள் தீபம் ஏற்ற நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். மேலும், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தியது தொடர்பான அறிக்கையை நாளை காலை 10.30 மணிக்குள் சமர்ப்பிக்கவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், தீபம் ஏற்ற காவல்துறை அனுமதிக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செல்ல இருப்பதால் அனுமதி மறுப்பதாக காவல்துறை தெரிவித்தது. இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இரவு நடக்கும் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இரவு விசாரணை நடக்காது என்றும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்றைய உத்தரவு தொடர்பாக நாளை காலை 10.30 மணிக்கு தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications