தமிழகத்தை அதிர வைத்த மதுரை ED அதிகாரி கைது விவகாரம்.. இணையத்தில் தீயாக பரவும் அறிக்கை! என்ன மேட்டர்
மதுரை: திண்டுக்கல் மருத்துவரை மிரட்டி லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் அமலாக்கத் துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்டதாகப் போலி அறிக்கை ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியும் சுரேஷ் பாபு என்பவர் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது இருப்பினும், அந்த வழக்கு முடிந்துவிட்டதாகத் தெரிகிறது.

இதற்கிடையே அங்கித் திவாரி என்ற அமலாக்கத்துறை அதிகாரி சுரேஷ் பாபுவை தொடர்பு கொண்டு முதலில் ரூ 3 கோடி லஞ்சம் கேட்டுள்ளார். கடந்த மாதம் திவாரிக்கு பயந்து திண்டுக்கல் மருத்துவர் ரூ 20 லட்சம் லஞ்சம் கொடுத்தார்.
என்ன நடந்தது: தொடர்ந்து அவரை மிரட்டிய அமலாக்கத் துறை அதிகாரி மேலும், 31 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டியுள்ளார். இதையடுத்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளார் டாக்டர் சுரேஷ். அவர்கள் அறிவுறுத்தல்படி ரசாயனம் தடவிய ரூ 31 லட்சம் நோட்டுகளை அங்கித் திவாரியிடம் திண்டுக்கல் மருத்துவர் சுரேஷ் பாபு. லஞ்சம் வாங்கிவிட்டுத் தப்ப முயன்ற அவரை பல கிமீர விரட்டிச் சென்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையினர் பிடித்துள்ளனர்
தொடர்ந்து மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். முதலில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் சோதனை நடத்த அங்குள்ள உயர் அதிகாரிகள் மருத்துள்ளனர். அதன் பிறகு சிறிது நேரம் கழித்தே திவாரியின் பணிபுரிந்த இடத்தில் மட்டும் சோதனையை ஆரம்பித்துள்ளது. மேலும், அங்கே பாதுகாப்பிற்குத் தமிழ்நாடு போலீஸ் குவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென துணை ராணுவப்படையும் குவிக்கப்பட்டது. இதனால் அங்கே ஒருவித பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: முடிந்துபோன வழக்கை மீண்டும் விசாரிக்கப் போவதாக அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்டதாகப் போலியாக ஒரு அறிக்கை இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
போலி அறிக்கை: அந்த போலி அறிக்கையில், திண்டுக்கல் மருத்துவர் மீதான வழக்கை விசாரிக்கப் பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாகக் கூறி அங்கித் திவாரி மருத்துவர் சுரேஷை மிரட்டியுள்ளார் என்றும் கடந்த அக். 30ஆம் தேதி விசாரணைக்கு ஆஜரான திண்டுக்கல் மருத்துவரிடம் இதுபோல அமலாக்கத் துறை அதிகாரி திவாரி மிரட்டியுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து அமலாக்கத் துறை அதிகாரி அழைப்பை ஏற்று மதுரை சென்ற மருத்துவரை காரில் ஏற்றிக் கொண்டு லஞ்ச பேரம் பேசியுள்ளார் என்றும் இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் 3 கோடி ரூபாய் லஞ்சம் தர வேண்டும் எனக் கேட்டுள்ளார். இருப்பினும் அதற்கு மருத்துவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.
விஜிலென்ஸ்: அதன் பிறகு மீண்டும் வந்த அங்கித் திவாரி, உயர் அதிகாரிகளிடம் பேசியதாகவும் ரூ.51 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்றும் மருத்துவரிடம் பேரம் பேசியுள்ளார் என்றும் அமலாக்கத் துறை நடவடிக்கைக்குப் பயந்து அந்த திண்டுக்கல் மருத்துவர் கடந்த 1ஆம் தேதி முதற்கட்டமாக ரூ.20 லட்சம் பணத்தைக் கொடுத்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது..
அடுத்து மீத தொகை 31 லட்ச ரூபாயை லஞ்சமாக வாங்கும் போது தான் அங்கித் திவாரியை விஜிலென்ஸ் அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர் என்று கூறப்பட்டது. இதற்கிடையே லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் இதுபோல எந்தவொரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்றும் இந்த அறிக்கை போலியானது என்றும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications