ரேசன் கடைகளில் கைரேகை முறையில் சிக்கல்.. சூப்பர் தீர்வை கொண்டு வரும் அரசு! அமைச்சர் சக்கரபாணி தகவல்
மதுரை: ரேஷன் கடைகளில் கை ரேகை மூலம் பொருட்களை வழங்கும்போது சில இடங்களில் பிரச்சினை இருப்பதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், இது குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது அவர் ரேசன் கடைகளில் பொருட்களை வழங்கும் நடைமுறை குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

அமைச்சர் சக்கரபாணி
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, "மழையால் சில இடங்களில் நெல் பாதிப்பு அடைவதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்காகக் கூடுதலாக இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடங்களில் ஒத்திக்கு வாங்கி பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். இதற்காக நபார்டு வங்கியிடம் நிதி உதவி கேட்டுள்ளோம். இந்த ஆண்டு முதல் இத்திட்டத்தைச் செயல்படுத்தலாம் என உள்ளோம்.

என்ன பிரச்சினை
தொடர்ந்து அதிகளவு ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாகக் கடந்த 26 ஆறாம் தேதி சென்னையில் துறை சம்பந்தமான காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இனிமேல் அரிசி கடத்தல் நடைபெறுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தில் ரேசன் பொருட்களைச் சேமித்து வைக்க மொத்தம் 256 குடோன் உள்ளது. இந்த குடோனில் இருந்து எந்த கடைக்குச் செல்கிறது என்பது தெரியாது.

குடோன் நம்பர்கள்
இதனால் அரிசி எங்கிருந்து கடத்தப்படுகிறது என்பதை கண்டறிவதில் சிக்கல் இருந்தது. இந்த பிரச்சினையைச் சரி செய்யும் வகையில் மாநிலத்தில் இருக்கும் 256 குடோன்களுக்கும் கோடு நம்பர் கொடுக்க உள்ளோம். இதன் மூலம் எந்த குடோனில் இருந்து அரிசி கடத்தப்படுகிறது.என்பதை எளிதாகக் கண்டறிய முடியும். புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களிலும் புதிதாக புதிய யூனிட் சிபிசிஐடி குழு அமைக்க முதலமைச்சர் அனுமதி தந்துள்ளார். யார் அரிசி கடத்தலில் ஈடுபட்டாலும் அவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

கைரேகை முறை
ரேஷன் அரிசியில் வாங்க வரும் பொதுமக்கள் கைரேகை பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுத் தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் சக்கரபாணி, "சில இடங்களில் இதுபோன்ற பிரச்சனைகள் உள்ளது. வயல்வெளியில் வேலை செய்யும் மக்கள் கைரேகை பதிவு செய்யவில்லை எனக் குற்றச்சாட்டு உள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கண் கருவிழி மூலமாகப் பொருள்கள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண் கருவிழி மூலம்
தமிழகத்திலும் இதேபோல கண் கருவிழி கருவி மூலமாகப் பொருள்கள் வாங்க ஏற்பாடு செய்ய உள்ளோம். முதலில் சோதனை முறையில் இத்திட்டத்தைச் செயல்படுத்த உள்ளோம். இத்திட்டம் மக்களுக்கு நல்ல பயன்தரும் முறையில் இருந்தால், தமிழகம் முழுவதும் கண் கருவிழி கருவி மூலம் பொருட்களை வாங்க முடிவு செய்யப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications