நெல்லை ஜெயக்குமார்..‘அவங்கள’ ஒரு மணி நேரம் ஃப்ரியா விடுங்க..உண்மை தெரியும்! ஆர்பி உதயகுமாரின் ஐடியா
மதுரை : திமுக ஆட்சியர் மகிழ்ச்சி இல்லை வீழ்ச்சி தான் உள்ளது எனவும், காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் காவல்துறையை சுதந்திரமாக விட்டால் ஒரு மணி நேரத்தில் கொலையாளியை கண்டுபிடித்துள்ளார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த அவர்," மூன்று ஆண்டுகள் முடிந்து நான்காம் ஆண்டு தொடக்க விழாவை திமுக அரசு காண்கிறது. கடுமையான மின்கடன உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் என இந்த மூன்று ஆண்டுகளில் 30 ஆண்டுக்கான சுமைகளை மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.

30 ஆயிரம் கோடியை ஊழல் செய்துவிட்டு அந்த பணத்தை ஸ்டாலின் மகன் உதயநிதியும், அவரது மருமகன் சபரீசன் எங்கே வைப்பது என்று தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் என அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் ஆடியோ வெளியானதன் மூலம் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
சட்டம் ஒழுங்கு: அது மட்டுமல்ல இந்த மூன்று ஆண்டுகளில் அதிகமான கடன் சுமை உள்ள மாநிலமாக தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. சட்ட ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணத்தை உயர்த்த மட்டோம் என்று கூறினார்கள். ஆனால் கடுமையாக மின் கட்டத்தை உயர்த்தி விட்டார்கள். 520 தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள். அதில் எத்தனை சதவீதம் நிறைவேற்றி உள்ளோம் என்று மனசாட்சியுடன் கூற முடியுமா?
கிணற்றில் போட்ட கல்: நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று கூறினார்கள். அது கிணத்தில் போட்ட கல்லாக இருக்கிறது, கல்வி கடன் ரத்து என்று கூறினார்கள் அது கிணற்று போட்ட கல்லாக இருக்கிறது, கேஸ் மானியம் 100 ரூபாய் தருவோம் என்று கூறினார்கள் அது கிணற்று போட்ட கல்லாக இருக்கிறது, பெட்ரோல் விலையை கண்துடைப்பாக மட்டும் குறைத்து விட்டு டீசலுக்காக விலையை குறைக்கவில்லை, ஆயிரம் ரூபாய் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கும் என்று கூறினார்கள் தமிழகத்தில் 2 கோடியே 15 லட்சம் குடும்பங்கள் உள்ளது ஆனால் ஒரு கோடிக்கு நபர்களுக்கு கொடுத்துவிட்டு பாரபட்சம் பார்க்கிறார்கள்.
ஏமாற்றம்: நமக்கு நன்மை செய்வார்கள் என்ற எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றத்தை தான் திமுக அரசு பரிசாக கொடுத்துள்ளது. இனியும் இந்த இரண்டு ஆண்டுகளில் அரசை மக்கள் நம்ப தயாராக இல்லை. இன்றைக்கு தமிழகத்தில் கடுமையான மின் பற்றாக்குறை ஏற்படுகிறது அதை சமன் செய்ய அரசு முன்வரவில்லை. திமுக ஆட்சி எப்போது வருகிறதோ அப்போதெல்லாம் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படும். மக்கள் கண்ணீர் சும்மா விடாது. மக்கள் கண்ணீருக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
நெல்லை ஜெயக்குமார் : நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணத்தில் கொலையா? தற்கொலையா ? என்ற முடிவு கூட இன்னும் வரவில்லை. இது காவல்துறை மெத்தனமா? அரசியல் குறிக்கீடா? அழுத்தமா ?என்று தெளிவாக தரவில்லை. புகார் கடிதம் கொடுக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். ஆனால் காவல்துறையில் கடிதம் கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள் .காவல்துறையை சுதந்திரமாக விட்டால் ஒரு மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்து விடுவார்கள் அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன். ஆனால் இன்றைக்கு காவல்துறை செயல் இழந்து உள்ளது" என்றார்.
-
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
Maridhas: மாரிதாஸ் கைது ஏன்? ஆதவ் உறவினர் ஜான் பிரிட்டோ குறித்து பேசியதுதான் காரணமா? அதிமுக நறுக்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications