கறந்த பால் மடிபுகாது..கருவாடு மீன் ஆகாது! சசிகலாவுக்கு நோ என்ட்ரி.. எடப்பாடி ’டீம்’ திட்டவட்டம்..!
மதுரை: ஆடி மாசத்தில் சசிகலா தென்காசியில் சென்றிருப்பது சுற்றுப்பயணம் அல்ல சுற்றுலா பயணம் எனவும், கறந்த பால் மடிபுகாது, கருவாடு மீன் ஆகாது ? என்பதைப் போல் அவரை மீண்டும் சேர்க்க முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
SAY NO TO DRUGS - SAY NO TO DMK என்ற தலைப்பில் திமுக ஆட்சி நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் குறித்தும், RESIGN STALIN என்ற தலைப்பில் திமுக ஆட்சியில் நடைபெற்ற கள்ளச்சாராயம் குறித்தும் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழக்கு நிகழ்ச்சி சமயநல்லூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்
ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர்," நான் இங்கு யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை, தரக்குறைவாக பேச விரும்பவில்லை. நடந்ததை குறிப்பிட விரும்புகிறேன். 33 ஆண்டு காலம் அம்மாவுடன் (சசிகலா)இருந்தவர் தென் தமிழகத்தில் இன்றைக்கு ஆடி மாதத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
நீங்கள் உங்கள் சமூகத்திற்கு என்ன செய்தீர்கள்.? உங்களை சேர்ந்தவர்களுக்கு நீங்கள் ஏதாவது செய்து இருந்தால் அனைவரும் உங்கள் பின்னால் வந்திருப்பார்கள்.? உங்களுக்கு இருக்கும் பணத்திற்கு, சொத்தை வைத்து ஏதாவது செய்து இருந்தால் அந்த பகுதியே சொர்க்க பூமியாக இருந்திருக்கும். இந்த இயக்கத்தை கபளீகரம் செய்து விடுவார்கள் என்று அம்மாவே அவர்களுடன் போராட்டம் செய்து தோற்றுப் போனார்.
தலைமைக் கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இவர்களை சேர்க்க வேண்டும், அவர்களை சேர்க்க வேண்டும் என யாரும் கூறவில்லை. அவர்களை சேர்க்க யாரும் விரும்பவுமில்லை. இவர்கள் இருந்தால் தான் வெற்றி பெறும் என்பது கற்பனை கதை. மக்கள் நினைத்தால் தான் வெற்றி பெற முடியும் மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார் 'The iron man of tamilnadu' எடப்பாடி பழனிசாமி
கறந்த பால் மடி போகாது, கருவாடு மீன் ஆகாது. அதேபோல் அவர்கள் யாரும் விரும்பவில்லை அதிமுக தொண்டர்கள் கவனமுடன், விழிப்புடன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் 17.10.1972 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் மக்கள் இயக்கமாக அதிமுகவை உருவாக்கினார். 33 ஆண்டுகள் அம்மாவுடன் நான் (சசிகலா) இருந்து ஆட்சி நிர்வாகத்தில் முழுமையாக செயல்படுத்தினேன் என்று தனக்குத்தானே பிரச்சாரத்தில் முன்னிலைப்படுத்துகிறார்.
ஆனால் தங்கள் சார்ந்த சமுதாயம் வறுமையில் கீழே உள்ளார்களே அவர்கள் கஷ்டம் தீர்க்க என்ன முயற்சி எடுத்தார்? கல்வியிலே, பொருளாதாரத்தில் பின்தங்கி செத்து செத்து பிழைக்கின்றனர். அந்தக் கண்ணீரைத் துடைப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார். அவர்களுக்கு என்ன முயற்சி எடுத்தார் என்பதை சொல்லத் தயாரா? இந்த பின்புல சமுதாயத்தை பயன்படுத்தி தன்னை வளர்த்துக் கொண்டாரே தவிர இந்த மக்களுக்கு ஒரு செம்பு தண்ணீர் கூட கொடுக்கவில்லை? மக்களுக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை., ஏதாவது செய்திருந்தால் இந்த நாடே அவர்கள் பின்னால் நின்றிருக்கும்.
புரட்சித்தலைவர் ,புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் நம்பிக்கையான தளபதியாக இருந்த எஸ்.டி.எஸ், திருநாவுக்கரசர்,கருப்புசாமி பாண்டியன்,காளிமுத்து, அழகு திருநாவுக்கரசு, சத்தியமூர்த்தி, துரைராஜ், பரமசிவம், நயினார் நாகேந்திரன், திண்டுக்கல் சீனிவாசன்,நத்தம் விஸ்வநாதன் போன்ற பல அதிமுக மூத்த முன்னோடிகளின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாவதற்கு யார் காரணம்.? அம்மா காரணம் இல்லை. இன்றைக்கு ஆடி மாதத்தில் தென்காசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா தான் காரணம்.
ஆடி மாதத்தில் தென்காசியில் சுற்றுப்பயணம் என்ற பெயரில் சுற்றுலா பயணம் சென்று இருக்கிறார். கண் கெட்டப்பிறகு சூரியன் நமஸ்காரம் என்பது போல உள்ளது. அவர்களுக்கு இருக்கக்கூடிய சொத்து பணத்திற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாவது செய்திருக்க முடியும் ஆனால் எதுவும் செய்யவில்லை. காலமும் அதிகாரமும் கையில் இருந்தும் ஏழை எளிய மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. நீங்கள் தமிழக மக்களுக்கு ஏதாவது செய்திருக்கிறீர்களா..? உங்கள் மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள் மக்களும் உங்களிடம் ஏமாற தயாராக இல்லை.
கடந்த 2021 தேர்தலில் அரசியலில் விட்டு ஒதுங்கி கொள்கிறேன் எனக் கூறியவர் தற்போது மீண்டும் அரசியல் குதிக்கிறேன் என சொல்கிறார்.? இதில் எதை ஏற்றுக்கொள்ளவது? மக்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். ஜானகி அம்மாள் அவர்கள் எடுத்த முடிவை முன்மாதிரியாக கொண்டு சசிகலா செயல்பட்டால் இரண்டு கோடி தொண்டர்களும் பலன் அடைவார்கள் என எடப்பாடியார் கூறியதை அவர்கள் செய்தால் நன்றாக இருக்கும். கறந்த பால் மடியேறாது கருவாடு மீனாகாது என்பது போல மீண்டும் அதிமுகவில் சசிகலாவை இணைத்துக் கொள்ள மாட்டோம்" என்றார்.
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
"அதிமுக தொண்டர்களிடம் பிச்சை கேட்கிறீர்களா?" ஆதவ் அர்ஜுனா மீது ஆர் பி உதயகுமார் கடும் தாக்கு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications