ஜல்லிக்கட்டில் உயிரை பணயம் வைத்து வெல்லும் மாடு பிடி வீரர்களுக்கு அரசு வேலை? அமைச்சர் விளக்கம்
மதுரை: ஜல்லிக்கட்டில் முத்திரை பதிப்பவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் மூர்த்தி பதில் அளித்துள்ளார். மேலும் உள்ளூர் மாடுகளுக்கு டோக்கன் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்தும் அவர் பதில் அளித்துள்ளார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மதுரையில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரசித்தி பெற்றவையாகும்.

இதில் ஆயிரக்கணக்கான ஜல்லிக்கட்டு காளைகளையும் மாடு பிடி வீரர்களும் கலந்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் இன்று அவனியாபுரத்தில் தொடங்கி ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிட்டார். அவர் கூறியிருப்பதாவது: அரசு விதிகளுக்குள்பட்டு இந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இன்று நடந்த போட்டியில் 1100 காளைகளும் 900 மாடு பிடி வீரர்களும் களமாடினர். இந்த முறை மொத்தம் 10 ரவுண்ட் வைக்கப்படுகிறது. 9 ரவுண்ட் வரை யார் அதிக மாடுகளை அடக்கினார்களோ அவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது.
ஒரு ரவுண்டில் பங்கேற்றவர்கள் மற்ற ரவுண்டுகளில் பங்கேற்க முடியாது. வெற்றி பெறும் மாட்டின் உரிமையாளருக்கு டிராக்டரும், மாடுபிடி வீரர்களுக்கு காரும் வழங்கப்படுகிறது என்றார்.
அப்போது செய்தியாளர்கள், மாடு பிடி வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு வேலை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு மூர்த்தி கூறுகையில் மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்கும் கோரிக்கை குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வோம். அவர்கள் ஆலோசனை செய்து முடிவு எடுப்பார்கள்.
உள்ளூர் மாடுகளுக்கு டோக்கன் என்பதே சட்டவிரோதம். எல்லாமே ஆன்லைனில்தான் பதிவு செய்யப்படுகிறது. என் பெயரில் மாடு இருக்கிறது என்றால் எனது பிஏ பெயரில் பதிவு செய்தால் அது ஏற்கப்படாது.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கும் சேர்த்து 12,560 பேர் பதிவு செய்தனர். ஆனால் 3300 மாடுகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டது. மீதமுள்ள 9 ஆயிரத்து சொட்சம் மாடுகளுக்கு சுற்றுலா துறை சார்பில் மதுரையில் அலங்காநல்லூர் கீழக்கரையில் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்படும். முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதால் 9 ஆயிரம் பேருக்கு டோக்கன்கள் கொடுக்கப்பட முடியவில்லை என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications