ரம்ஜான் பண்டிகை.. திருமங்கலத்தில் திகைப்பு.. ரூ.6 கோடிக்கு ஆடுகள்.. குஷியில் மதுரை விவசாயிகள்.. சபாஷ்
மதுரை: ஒரே நாளில் மதுரை மாவட்டத்தையே திணறடித்துவிட்டது திருமங்கலம்.. அப்படி என்ன நடந்தது திருமங்கலம் ஆட்டு சந்தையில்?
மதுரை மாவட்டம் திருமங்கலம் கால்நடை சந்தையானது மிகவும் புகழ்பெற்றது.. ஆடு மற்றும் கோழி சந்தை இங்கு நடைபெறுவது வழக்கம்.. ஆடு, கோழி தவிர, சேவல்கள், வீட்டுக்கு தேவையான பொருட்களும் இங்கு கொண்டு வரப்படும்.
திருமங்கலம்: அதனால்தான், திருமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக அளவில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.. அதுமட்டுமல்ல, திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் விற்பனையாகும் ஆடுகளின் இறைச்சி சுவை மிகுந்ததாக இருப்பதால் இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வார்கள்.

இந்த ஆட்டுச் சந்தையில் திருமங்கலம் மட்டுமல்லாது மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆட்டு வியாபாரிகள் ஆடுகள் வாங்க வருவார்கள்..
பண்டிகை காலம்: பண்டிகை காலங்களில் மட்டுமல்லாமல், ஆடி மாதம் போன்ற விசேஷ நாட்களிலும் இந்த சந்தை படுபிஸியாக இருக்கும். காரணம், கிராம பகுதிகளில் கோவில் திருவிழாக்கள் அதிகமாக நடைபெறுவதால், அசைவ விருந்து பரிமாறுவார்கள்.. தெய்வங்களுக்கு ஆடுகளை பலி கொடுத்து உறவினர்களுக்கு அசைவ விருந்து வைப்பது வழக்கம் என்பதாலும், ஆடுகள் வியாபாரம் அமோகமாக நடக்கும்.
இப்போது, ரம்ஜான் பண்டிகையும் நெருங்கி கொண்டிருக்கிறது.. மற்றொருபக்கம் தேர்தல் விழாக்காலம் துவங்கி உள்ளது..
தேர்தலுக்காக தொண்டர்களுக்கு கிடா விருந்து வைக்கவும், ஆடுகள் அதிக அளவு விற்பனையாக துவங்கி உள்ளன.. இதை கருத்தில் கொண்டு, நிறைய செம்மறி, வெள்ளாடுகள் சந்தைக்கு கொண்டு வரப்படுகின்றன.
ஆடுகள் விற்பனை: ஆடுகளின் விலை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை விற்பனையாகி உள்ளது. அதிலும், திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் அதிகாலை 2 மணி முதல் ஆடு விற்பனை களை கட்டியது. இன்று ஒரு நாள் மட்டும் ரூ.6 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக ஆட்டுச் சந்தை குத்தகைதாரர்கள் தெரிவித்தனர்.
ஆனால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஆடுகளின் விலை ஆயிரம், ரூ.3000 வரை விலை உயர்ந்துள்ளதாம்.. இதற்கு 2 காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, ரம்ஜான் பண்டிகையால் வரத்து குறைவு என்பதால் வேறு வழியின்றி வியாபாரிகள் வாங்கி செல்ல நேரிடுகிறதாம். அதேபோல, ஆடுகள் வரத்து குறைவு காரணமாகவும் விலை உயர்ந்துள்ளதாக ஆட்டு உரிமையாளர்கள் சொல்கிறார்கள்.
நடத்தை விதிகள்: ஆனாலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், இந்த வாகனங்களை கொண்டுசெல்வதில் சிக்கல் உள்ளது.. ஆடுகளை வாங்க வருபவர்களும், விற்பனை செய்யக்கூடிய வியாபாரிகளும் கையில் அதிக பணம் எடுத்துச் செல்ல முடியாத நிலைமை உள்ளதால், அப்பணத்தை பகிர்ந்து கொண்டு செல்கிறார்களாம்..
எனவே, தேர்தல் அதிகாரிகள் கெடுபிடியால் அதிக தொகையை கொண்டு செல்வதில் அச்சம் உள்ளதால், தங்களுக்கு மட்டும் சலுகைகள் கொடுக்க வேண்டும் என்றும் ஆடு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications