பெரியார் சிலை சேதம்.. அர்ஜுன் சம்பத் மனுவை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! விடாமல் தொடரும் கண்டம்!
மதுரை: ஸ்ரீரங்கம் பெரியார் சிலையை சேதப்படுத்திய விவகாரத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் முன்பாக பெரியார் சிலை அமைந்துள்ளது. இந்தச் சிலையை அகற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. கடந்த 2006ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முன்பாக உள்ள பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்தியது தொடர்பாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட பலர் மீது ஸ்ரீரங்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவர் இறந்துவிட்டார்.

இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், என் மீதான எந்த ஆதாரமும் இல்லாமல் அனுமானத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்டு அலைக்கழிக்கும் வகையில் விசாரணை தாமதமாக நடைபெற்று வருகிறது. எனவே என் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து, கீழமை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நீதிபதி இளங்கோவன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தன் மீதான வழக்கு விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என அர்ஜூன் சம்பத் கோரிக்கை விடுத்தார். அதேசமயம், அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி, பெரியார் சிலையை சேதப்படுத்தியது குறித்து மனுதாரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற செயல்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது என்றார்.
மேலும், இந்த வழக்கு திருச்சி விசாரணை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று ஏழு சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, அர்ஜூன் சம்பத்திற்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிட முடியாது எனக் கூறி அர்ஜுன் சம்பத் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையில் உள்ள வாசகங்கள் இடம்பெற்ற பலகை, பாஜக ஆட்சிக்கு வந்த உடனே அகற்றப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதற்கு திமுக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications