செல்போனை போலீஸ்கிட்ட ஒப்படைங்க.. உடனே மன்னிப்பு கேளுங்க.. பாஜக செல்வகுமாரை விளாசிய ஐகோர்ட் கிளை!
மதுரை: பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி செல்வகுமார், தனது செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்கவும், தனது செயலுக்கு சமூக வலைதளத்தில் வருத்தம் தெரிவிக்கவும், அவதூறு பரப்பிய ட்வீட்டை நீக்கவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் தயாரிக்க திருப்பதி லட்டு விவகாரத்தில் கலப்பட புகாரில் சிக்கியுள்ள திண்டுக்கல்லைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பாஜக நிர்வாகி செல்வகுமார் தகவலை பதிவிட்டு இருந்தார்.

இதனை மறுத்த பழனி கோயில் நிர்வாகம், பழனி முருகன் கோயிலில் பஞ்சாமிர்தத்திற்கான நெய், ஆவின் நிறுவனத்திடம் இருந்து மட்டுமே வாங்கப்படுவதாக தெரிவித்தது. இது தொடர்பாக வதந்தி பரப்பியதாக பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் பாஜக நிர்வாகிகள் செல்வகுமார் மற்றும் வினோஜ் பி செல்வம் மீது புகார் அளித்தது.
புகாரைப் பெற்ற பழனி காவல் துறையினர், கோவையைச் சேர்ந்த பாஜக தொழிற்பிரிவு மாவட்ட துணைதலைவர் செல்வகுமார் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவது, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பியது என இரண்டு பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார் பாஜக நிர்வாகி செல்வகுமார். இந்த மனு இன்று நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாஜக நிர்வாகி செல்வகுமார் தவறான தகவலை பதிவிட்டதால் மதரீதியான பிரச்சனைகள் உருவாகும் சூழல் ஏற்பட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி, சமூக வலைதளங்களில் கருத்தை பதிவிடுவதற்கு முன்பு அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். உண்மைத் தன்மையை உறுதி செய்யாமல் பதிவிட்டு விட்டதாக சமூக வலைதள பக்கத்தில் மீண்டும் மன்னிப்பு கேட்டு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி செல்வகுமார், செல்போனை காவல்துறையிடம் சமர்ப்பிக்கவும், தனது செயலுக்கு சமூக வலைதளத்தில் வருத்தம் தெரிவிக்கவும், அவதூறு ட்வீட்டை நீக்கவும் உத்தரவிட்டு செல்வகுமாருக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும், தொடர்ந்து இதுபோல நடந்துகொண்டால், சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற உத்தரவிட நேரிடும் எனவும் நீதிபதி பரத சக்ரவர்த்தி எச்சரிக்கை விடுத்தார். பாஜக நிர்வாகி செல்வகுமார் வாய்ச்சொல் வீரராக இல்லாமல், நிஜத்தில் சேவைகளைச் செய்ய வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
-
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள்












Click it and Unblock the Notifications