அதிர்ந்த பாஜக புள்ளி.. "பார்வர்டு வீடியோ"?.. இது கடுமையான செயல்.. மதுரை ஹைகோர்ட் ஒரே போடு.. என்னாச்சு
வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் போலி வீடியோ பகிர்ந்த பாஜக செய்தி தொடர்பாளர் உம்ராவ் மீதான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிருப்தி
மதுரை: தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோவை பதிவிட்டிருந்த பாஜக செய்தி தொடர்பாளருக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் கடுமையாக தாக்கப்படுவதாகவும், 11 பேர் வரை இந்த தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாகவும் போலியான இரண்டு வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவின. இந்த வீடியோ குறித்து தமிழ்நாடு காவல்துறை இந்தி மொழியிலேயே விளக்கமளித்திருந்தது. அதாவது, "இந்த இரண்டு வீடியோக்களும் போலியானவை. ஒன்று பீகார் மற்றும் உத்தரகாண்ட் தொழிலாளர்களுக்கு இடையேயான மோதல். மற்றொன்று உள்ளூர் மக்களுக்கு இடையேயான மோதல்" என்று விளக்கமளித்தது.
மேலும், "இது போன்ற போலி வீடியோக்களை பரப்புவது சட்டப்படி குற்றமாகும். மீறி பரப்புவோர்கள் மீது சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் எச்சரித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பினர். இதனால் ஹோட்டல் தொழில், ஆயத்த ஆடை தொழில், கட்டுமானம் என பல்வேறு தொழில்கள் முடங்கின. இந்த போலி வீடியோவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தது.

பாஜக செய்தி தொடர்பாளர்
இப்படி இருக்கையில் பீகார் சட்டப் பேரவையில் எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக, இந்த வீடியோ ஆதாரத்தை காட்டி தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். ஆனால் பீகார் அரசு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றிருக்கிறது என்று விமர்சித்தனர். இதனையடுத்து போலி வீடியோவை பரப்பியவர்கள் மீது தமிழ்நாடு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தொடங்கினர். அதன்படி பலர் மீதும வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் உத்தரப் பிரதேச பாஜக செய்தி தொடர்பாளர் உம்ராவ்-வும் ஒருவர்.

வழக்குப்பதிவு
தன் மீதான வழக்குப்பதிவை எதிர்த்து உம்ராவ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், "இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க முடியாது. இது தமிழ்நாட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு என்பதால் இது தொடர்பான நீதிமன்றத்தில் 10 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும்" என்று கூறியிருந்தது. இதனையடுத்து உம்ராவ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி இளந்திரையன் முன்பு வந்தது.

முன்ஜாமினுக்கு எதிர்ப்பு
இதில் உம்ராவ் தனது மனுவில், "அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய இந்த டிவிட்டர் வீடியோவை நான் உருவாக்கவில்லை. இந்த வீடியோவை பார்வேர்ட் செய்தது யார் என்று கூட எனக்கு தெரியாது. இந்த வீடியோவால் தற்போது இரு மாநிலங்களுக்கு இடையே எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை" என்று கூறியிருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, "இந்த வீடியோ இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். மனுதாரருக்கு எவ்வித முன்ஜாமீனும் வழங்கக்கூடாது. இவர் ஷேர் செய்த வீடியோவை சுமார் 5 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்" என்று தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியிருந்தார்.

அதிருப்தி
இந்நிலையில், "மனுதாரரின் டிவிட்டர் பதிவால் தமிழ்நாட்டிலிருந்து வட மாநில தொழிலாளர்கள் பலர் வெளியேறியுள்ளனர். தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலும் புலம்பெயர் தொழிலாளர்களின் உயிருக்கும், உடைமைக்கும் இந்த வீடியோக்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன. இதனை கடுமையான செயலாக பார்க்க வேண்டும். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி பதிலளிக்க வேண்டும்" என்று நீதிபதி இளந்திரையன் கூறி வழக்கு விசாரணையை வரும் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
-
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
சமாதானமாகும் அண்ணாமலை?.. பேட்மிண்டன் மைதானத்துக்கே தேடிப்போன மத்திய அமைச்சர்! பின்னணி -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு











Click it and Unblock the Notifications