அடிக்க சொல்லி டிஎஸ்பிக்கு உத்தரவிட்ட அதிகாரி யார்? அஜித்குமார் கொலை வழக்கில் ஐகோர்ட் கிளை அதிரடி ஆணை
மதுரை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் (Ajith kumar) கொலை வழக்கில் ஜாமீன் கோரி போலீசார் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணை நீதிமன்றம் அடுத்த 6 மாதங்களுக்குள் முழுமையாக விசாரித்து முடிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமாரை கடந்த 2025 ஜூன் 27 ஆம் தேதி நிகிதா என்ற பெண்ணின் நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படைக் காவலர்கள் விசாரித்தனர். போலீசார் கொடூர தாக்குதலுக்கு உள்ளான காவலாளி அஜித் குமார் அடுத்த நாள் உயிரிழந்தார்.

இந்த கொலை வழக்கில் தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்கள் ஆனந்த் உள்ளிட்ட 5 பேர் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். ஆதாரங்கள் இல்லாமல் நாங்கள் கைது செய்யப்பட்டுள்ளோம். சிபிஐ விசாரணையை முடித்து விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பல மாதங்களாக சிறையில் உள்ளோம். எனவே ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பாக விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் முகைதீன் பாஷா ஆஜராகி இந்த வழக்கில் 94 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். மேலும் அஜித்குமார் நகையை திருடியதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. காணாமல் போன நகையை கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவித்தார்.
மேலும் டிஎஸ்பி-யை தவிர்த்து வேறு உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கண்டறியப்படவில்லை என்று தெரிவித்தார். இந்த வழக்கில் 2 குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் காவல் துறையினர் தான் அஜித்குமாரை அடித்து கொலை செய்துள்ளனர் என்பதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளது. எனவே காவலர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி “காவல்துறையினர் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். உயர் அதிகாரி ஒருவர் அடிக்க சொல்லி உத்தரவிட்டால் அடித்து கொலை செய்வதா? அடிக்க முடியாது என ஏன் சொல்ல மறுக்கிறீர்கள். சட்ட விரோதமாக செயல்பட முடியாது என்று உயர் அதிகாரியிடம் சொல்லுங்கள். நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றத்திற்கு வாருங்கள். நீதிமன்றம் உங்களை பாதுகாக்கும்” எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய நீதிபதி, “இந்த வழக்கில் போலீசார் செய்த குற்றம் மன்னிக்க முடியாத குற்றம். எனவே மீதமுள்ள குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய வேண்டும். டிஎஸ்பிக்கு உத்தரவிட்ட அதிகாரி யார்? என்று கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு உத்தரவிட்ட அதிகாரி பாதுகாக்கப்பட்டு வருகிறார்" என்றும் விமர்சித்தார்.
மேலும், “விசாரணை முடியும் வரை யாருக்கும் ஜாமீன் வழங்க முடியாது. அஜித்குமார் மரண வழக்கு விசாரணையை நீதிமன்றம் 6 மாதத்தில் முடிக்க வேண்டும்” என உத்தரவிட்டு ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications