கன்னியாகுமரியில் பேரூராட்சி தலைவி பதவி பறிப்பு.. மதம் மாறி திருமணம்.. இந்துக்கள் சலுகை பெற முடியாது
மதுரை: கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி வார்டு எண் 2-ல் பெண்கள் பொது வார்டில் அ.தி.மு.க. சார்பில் அமுதா ராணி என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேரூர் பேரூராட்சி தலைவர் பதவியானது, ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. கிறிஸ்தவரான அமுதாராணி, தன்னை ஆதிதிராவிடர் என கூறி தன்னுடைய பிறப்பு சான்றிதழை சமர்ப்பித்ததாக திமுக கவுன்சிலர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மதம் மாறி திருமணம் செய்தவரை பேரூராட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி தி.மு.க. கவுன்சிலர் அய்யப்பன், சென்னை தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், "2022-ம் ஆண்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தேரூர் பேரூராட்சி வார்டு எண் 2-ல் பெண்கள் பொது வார்டில் அ.தி.மு.க. சார்பில் அமுதா ராணி என்பவர் போட்டியிட்டு வென்றார். தேரூர் பேரூராட்சி தலைவர் பதவியானது, ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது.

இதில் கிறிஸ்தவரான அமுதாராணி, தன்னை ஆதிதிராவிடர் என கூறி தன்னுடைய பிறப்பு சான்றிதழை சமர்ப்பித்து தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அமுதாராணி, 2005-ல் கிறிஸ்தவராக மாறி, கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவரை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்திருக்கிறார். இதனால் சட்டப்படி அவர் ஆதிதிராவிடர் இடஒதுக்கீட்டின் பலனைப் பெற இயலாது. எனவே பேரூராட்சி தலைவர் பதவியில் இருந்து அமுதாராணியை நீக்கி உத்தரவிட வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் தி.மு.க. கவுன்சிலர் அய்யப்பன் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி விக்டோரியா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இந்து பட்டியல் இனத்தைசேர்ந்த அமுதாராணி, கிறிஸ்தவ வழிமுறைகளை பின்பற்றி கிறிஸ்தவரை திருமணம் செய்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆகவே அமுதாராணி தேரூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தபோது அதனை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்து இருக்க வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் அப்போதைய ஆளுங்கட்சிக்கு சாதகமாக தேர்தல் அதிகாரி செயல்பட்டு இருப்பதை இங்கு தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் அறிய முடிகிறது.
இந்தியா போன்ற ஒரு ஜனநாயக வலிமைமிக்க நாட்டின் உயிர்நாடியாக நாடாளுமன்றம், சட்டசபை, உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. எனவே இதற்கு தகுதியான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களிடம் உள்ளது. இத்தகைய மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையின்போது ஆளுங்கட்சியின் பகடைக்காய்களாக தேர்தல் அதிகாரிகள் மாறுகிறார்கள். இது, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை கேலிக்கூத்தாக்குவதாக உள்ளது. இந்த வழக்கில் தேரூர் பேரூராட்சி தலைவர் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அமுதாராணிக்கு ஆதரவாக திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிட நலத்துறையின் உறுப்பினர் செயலர் செயல்பட்டு அறிக்கை அளித்து இருப்பது சட்டவிரோதம் ஆகும். ஆகவே அந்த அறிக்கை ரத்து செய்யப்படுகிறது.
அமுதாராணி திருமண சான்றிதழ் மூலம் அவர் கிறிஸ்தவ மதத்தை தழுவியது ஆதாரங்கள் மூலம் உறுதியாகி உள்ளது. இந்த விஷயத்தில் மனுதாரர் ஒரே நேரத்தில் இருவேறு சலுகைகளை அனுபவிக்க இயலாது. இந்திய கிறிஸ்தவ திருமண சட்டத்தின்படி கிறிஸ்தவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு, பொது வேலைக்காக தன்னை இந்து என அடையாளப்படுத்துவது ஏற்கத்தக்கது கிடையாது. அந்த வகையில் அமுதாராணியை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும்" இவ்வாறு நீதிபதி விக்டோரியா தனது உத்தரவில் கூறியுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications