Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரையில் மெட்ரோ ரயில் பாதை எப்படி அமையப்போகிறது? வெளியான தகவல்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கையில் சில விஷயங்களை சென்னையை ஒப்பிடும் போது மாறி உள்ளது. சென்னையில் நடைமேடை அகலம் அதிகமாக உள்ள நிலையில் அதைவிட குறைவான அகலத்திலேயே நடைமேடை மதுரையில் அமைய உள்ளதாம். சென்னையில் 4 பெட்டிகள் கொண்டதாக மெட்ரோ ரயில் உள்ள நிலையில், மதுரையில் 3 பெட்டிகள் என்கிற அளவிலேயே அமைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

போக்குவரத்து நெரிசல் அதிகமாக கொண்டே வருவதால் மக்கள் இலகுவாக பயணிக்க இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இந்தியாவின் முதல் நிலை மெட்ரோ நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதரபாத், புனே, நாக்பூர், அஹமதாபாத், கொச்சி போன்ற முக்கிய நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் முதன்முதலாக 1999-ம் ஆண்டு டெல்லியில் மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் 2007-ல் பெங்களூரிலும், 2011-ல் சென்னையிலும் தொடங்கப்பட்டது. இந்தியாவின் முக்கியமான மெட்ரோ நகரங்களில் மெட்ரோ ரயில் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் , 2-வது நிலை மற்றும் 3-வது நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மும்பை, டெல்லி, சென்னை போன்ற முதல் நிலை நகரங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டத்தில் உயர் மட்ட பாதை அமைக்க ஒரு கி.மீ ரூ.200 முதல் ரூ.250 கோடியும், சுரங்கப்பாதை அமைக்க ரூ.500 முதல் ரூ.550 கோடியும் ஆகும். இந்த திட்டத்திற்கு அதிக செலவு ஆகும். அந்த தொகையை குறிப்பிட்ட காலக்கட்டத்தில் பெருநகரங்களில் எடுத்துவிட முடியும் என்பதால் அந்த திட்டம் பெருநகரங்களில் செயல்படுத்தப்படுகிறது.

நியோ மெட்ரோ

நியோ மெட்ரோ

ஆனால் இரண்டாம் நிலை நகரங்களில் திட்டம் வேறுமாதிரி செயல்படுத்தப்படுகிறது. லைட் மெட்ரோ மற்றும் நியோ மெட்ரோ: ஆகிய இருவகையில் செயல்படுத்தப்படுகிறது. லைட் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த ஒரு கி.மீட்டருக்கு ரூ.120 முதல் ரூ.140 கோடி செலவாகும். சென்னை போன்ற பெருநகங்களில் செயல்படுத்தப்படும் திட்டத்தை ஒப்பிடும் போது செலவு பெரிய அளவில் குறைவாகவே இருக்கும். இந்த லைட் மெட்ரோ ரயில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். காலை அல்லது மாலை வேளையில் 15 ஆயிரம் பேர் பயணிக்க முடியும். நியோ மெட்ரோ திட்டத்தில் ஒரு கி.மீட்டருக்கு ரூ.70 முதல் ரூ.80 கோடி செலவாகும். மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடியும். காலை அல்லது மாலை வேளையில் 8 ஆயிரம் பேர் பயணிக்க முடியும்.

18 ரயில் நிலையங்கள்

18 ரயில் நிலையங்கள்

இந்நிலையில் மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கி.மீ தூரத்திற்கு, 18 ரயில்களை உருவாக்கி மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை சுரங்கப்பாதை வழியாக செயல்படுத்தினால் ரூ.8 ஆயிரம் கோடி செலவு ஆகும் என்றும் உயர்மட்ட பாலம் வழியாக செயல்படுத்தினால் ரூ.6,000 கோடியும் செலவு ஆகும் என்றும் மதிப்படப்பட்டுள்ளது. அரசிடம் சமர்பிக்கப்பட்ட அறிக்கையை ஆராய்ந்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரி இருக்கிறது.

மதுரை மெட்ரோ பாதை

மதுரை மெட்ரோ பாதை

மத்திய அரசு வழிகாட்டுதல் படி லைட் அல்லது நியோ மெட்ரோ ரயில் திட்டம் மதுரையில் செயல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறும் போது, சென்னை மெட்ரோவில் 4 பெட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் மதுரை மெட்ரோ ரயில் 3 பெட்டிகள் இருக்கும் வகையில் அமைக்கப்படும். நடைமேடைகள் சிறியதாக இருக்கும். சென்னையில் 120 மீ உள்ள நடைமேடை 80 மீட்டராக குறைய வாய்ப்பு உள்ளதாக கூறினார்கள். இந்த மெட்ரோ ரயில் வழித்தடம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் வெளி வீதிகளின் வழியாக செல்கிறது. இந்த திட்டத்திற்கு 75 நாட்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. அதன் பிறகு முழு விவரம் தெரியவரும்.

சிக்கலாக்கும் மேம்பாலம்

சிக்கலாக்கும் மேம்பாலம்

தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54 கிலோமீட்டருக்கு செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், 2-வது கட்ட மெட்ரோ பணிகள் ரூ.69,180 கோடி செலவில், 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. இதற்கிடையே கோவையில் மெட்ரோ ரயில் பணிக்கான திட்ட அறிக்கை வெளியாகிவிட்டது. அதன்படி, கோவையில் மொத்தம் 139 கி.மீ. தூரத்துக்கு 3 கட்டங்களாக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. முதல் கட்டமாக அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் 44 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.9,424 கோடி செலவும் ஆகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அவினாசி சாலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேம்பாலம் கட்டப்பட உள்ளதால், மெட்ரோ ரயில் பணிகளை எப்படி மேற்கொள்வார்கள் என்கிற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+