காசுக்கு ஆசைப்பட்டீங்கள்.. இந்த எலியாட்டம் ஆயிடுவீங்க.. மதுரையில் சுயேச்சை வேட்பாளர் நூதனம்
மதுரை: ஏரோநாட்டிக்கல் பொறியியல் படித்த பட்டதாரி இளைஞர் கையில் எலிப்பொறியில் சிக்கிய ரூபாய் நோட்டுடன் நூதன முறையில் வேட்பு மனுத்தாகல் செய்தார்.
Recommended Video
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 19-ஆம் தேதி நடைபெறுகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல்களையும் அந்தந்த கட்சியினர் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர்களும் அதிகளவில் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். சிலர் கஜினி முகமது போல் நிறைய முறை தேர்தலில் போட்டியிட்டு வரும் சுவாரஸ்ய சம்பவங்கள் நிகழ்கின்றன.

100 வார்டுகள்
அந்த வகையில் மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிட சுயேச்சை வேட்பாளர்கள் அதிகளவில் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 1ல் உள்ள வார்டு எண் 3க்கு போட்டியிடுவதற்காக ஏரோநாட்டிக்கல் பொறியாளர் (ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ்) 28 வயதான இளைஞர் ஜாபர் செரிப் சுயேச்சையாக களமிறங்குகிறார்.

மண்டல அலுவலகம்
இவர் இன்று மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் ரங்கராஜனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது கோட் சூட் அணிந்து கொண்டு கையில் எலி பொறியுடன் அதில் பணத்தை சிக்க வைத்தும் புகைப்படங்களுடன் வருகை தந்தார். அந்த புகைப்படத்தில் எலியும் , பணத்திற்கு ஓட்டை விற்ற நீயும் ஒன்று தான்" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தியவாறு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

துபாய் விமான நிலையம்
டெல்லியில் உள்ள ஸ்கூல் ஆப் ஏரோநாட்டிக்ஸ் இன்ஸ்டியூட் என்ற பயிற்சி மையத்தில் ஏரோகிராப்ட் மெயின்டனன்ஸ் பயின்றதோடு, துபாய் விமான நிலையத்தில் விமான பொறியாளராக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து தனது வார்டை முன்மாதிரி வார்டாக மாற்றுவதே தனது வாக்குறுதி என தெரிவித்தார்.

எலி பொறி
மேலும் படித்த பட்டதாரி இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும், தேர்தலுக்கு பணத்தை பெற்று பொறியில் சிக்கிய எலியை போல மாட்டிக் கொள்ள வேண்டாம் என அறிவுரை வழங்கினார். அரசியல் கட்சிகளும் படித்த இளைஞர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications