தமிழகத்தில் விஏஓ காலிப்பணியிடங்களை நேரடியாக நிரப்ப இடைக்கால தடை.. அதிரடி உத்தரவு போட்ட ஹைகோர்ட் கிளை
மதுரை: தமிழகத்தில் 218 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை மாவட்ட பணியிட மாறுதல் மூலம் நிரப்பாமல் நேரடி நியமனம் மூலம் நிரப்ப டிஎன்பிஎஸ்சிக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக கிராம நிர்வாக அலுவலர் சங்க பொதுச்செயலாளர் அருள்ராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அகமது ஃபயஸ் ஆகியோர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் பல மாவட்டங்களில் காலியாக இருக்கும் 218 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. இதில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. மாவட்ட அளவில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கிய பிறகு காலியுள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பலாம்.
கிராம நிர்வாக அலுவலர்களின் முதுநிலை பட்டியலை பார்க்காமலேயே பணியில் சேர்ந்த தேதியை மட்டும் அடிப்படையாக கொண்டு மாவட்ட மாறுதல் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவது தவறு எனக் கூறி உயர் நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது. இப்படி இருக்கும் போது, 218 காலிப்பணியிடங்களை நேரடியாக நிரப்ப முடிவு செய்து தமிழக அரசு டிஎன்பிஎஸ்சிக்கு பட்டியலை அனுப்பியுள்ளது.
இப்படி அனுப்பியிருப்பதால் இடமாறுதலுக்காக பல ஆண்டுகளாக காத்திருப்பவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுகிறது. எனவே 218 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை மாவட்ட பணியிட மாறுதல் மூலம் நிரப்பாமல், நேரடி நியமனம் மூலம் நிரப்ப டிஎன்பிஎஸ்சிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
மேலும், தகுதி வாய்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாறுதல் கோரிய மனுக்களை பரிசீலித்து அவர்களுக்கு உரிய இடங்களில் இடமாறுதல் வழங்கிய பிறகு நேரடி முறையில் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும். என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவானது இன்று நீதிபதி குமரேஷ்பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, "மாவட்ட பணியிட மாறுதல் நடத்தாமல் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நேரடி முறையில் டிஎன்பிஎஸ்சி நிரப்ப தடை விதிக்கப்படுகிறது. வருவாய் துறை ஆணையர், டிஎன்பிஎஸ்பி தலைவர் மனு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனு மீதான அடுத்த விசாரணையானது வரும் 14 ஆம் தேதி நடைபெறும்" என்று உத்தரவிட்டார்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications