பாம்பன் பாலம் சொதப்பல்கள்? வெளிநாட்டில் அனுமதி பெற்றது ஏன்? : கொந்தளித்த எம்பி
மதுரை: இந்திய ரயில்வே துறையிடம் அனுமதி பெறாமலே ராமேஸ்வரம் கடலில் புதிய பாம்பன் பாலம் கட்டப்பட்டுள்ளதாகவும் அதன் தரம் சரியாக இல்லை என்றும் மதுரை எம்பி சு. வெங்கடேசன் பேட்டி அளித்துள்ளார்.
பொதுமக்கள் பலரும் ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே பாம்பன் பாலம் எப்போது திறக்கப்படும்? அதில் எப்போது பயணிக்கலாம் எனக் காத்திருக்கும் வேளையில் அந்தப் பாலத்தின் கட்டுமான தரத்தைப் பற்றி ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

முறையாக ரயில்வே துறையிடம் அனுமதி பெறாமலே நிர்ணயிக்கப்பட்ட இரும்பு தண்டவாளங்களின் தரத்தைவிடக் குறைவான தரத்தில் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இதனை ஆய்வு செய்த அதிகாரி அறிக்கை அளித்துள்ளார். அந்த விவகாரம் வெளிவருவதற்கு முன்னதாகவே பாலத்தின் தூண்களில் உள்ள கட்டுமான கம்பிகள் வெளியே தெரியும் படி உடைந்து போய் காணப்படுவதாகச் செய்தியும் வெளியாகி உள்ளது.
இந்தச் சர்ச்சை தொடர்பாகப் பேசியுள்ள மதுரை எம்பி சு.வெங்கடேசன் அளித்துள்ள பேட்டியில், "ராமேஸ்வரத்தில் உள்ள கடல் நடுவே கட்டப்பட்டு பாம்பன் பாலம் பற்றி பலருக்கும் தெரியும். முதன்முதலாக 1914 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்தான் இது கட்டப்பட்டது. இதைக் கட்டி 100 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அதனால் அங்கே புதிய பாலத்தை மத்திய அரசு கட்டி இருக்கிறது. அதன் உறுதித்தன்மையை அதிகாரிகள் சில நாட்கள் முன்னர் நேரில் வந்து ஆய்வு செய்திருந்தனர். விரைவில் இதைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குப் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார் என்றும் தெரியவருகிறது.
இதனிடையே இந்தப் பாலத்தின் தரத்தை ஆய்வு செய்த ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இவர் ரயில்வே துறையின் கீழ் உள்ள அதிகாரி அல்ல. விமானத் துறையின் கீழ் உள்ள அதிகாரி. ஏனென்றால் ரயில்வே துறையைச் சேர்ந்த ஒருவரே பாலத்தின் தரத்தை ஆய்வு செய்தால், மேலதிகாரிக்குக் கட்டுப்பட்டு முறையான அறிக்கையைத் தரமுடியாமல் போகலாம் என்பதற்காக இப்படி ஒரு ஏற்பாட்டை மத்திய அரசு முன்கூட்டியே செய்து வைத்துள்ளது.

இந்தப் புதிய பாம்பன் பாலத்தின் ப்ளு பிரிண்ட் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பிடம் (ஆர்டிஎஸ்ஓ) அனுமதி பெறாமலேயே அனுமதி பெறாமலேயே கட்டிமுடிக்கப்பட்டுள்ளது என்று ஆய்வு செய்த அதிகாரி அறிக்கை அளித்துள்ளது இப்போது சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. ஆர்டிஎஸ்ஓ அனுமதிக்குப் பதிலாக வெளிநாட்டு நிறுவனத்தின் ஆலோசனையைப் பெற்று பாலத்தைக் கட்டியுள்ளனர். இது மிகப்பெரிய தவறான அணுகுமுறை.
ஏனெனில் இந்திய ரயில்வே என்பது உலகில் உள்ள மிகச்சிறந்த கட்டமைப்புகளில் ஒன்று. அதன் அனுமதி ஏன் பெறவில்லை என்பது கேள்வியாக உள்ளது. பால கட்டுமானத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள இரும்புகள் யாவும் ஆர்டிஎஸ்ஓ அமைப்பு நிர்ணயம் செய்துள்ள தரத்தில் இல்லை என்றும் ஆய்வு செய்தவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இது பாம்பன் பாலத்தின் பாதுகாப்பையே சந்தேகத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.
ஆர்டிஎஸ்ஓ அனுமதியே பெறாமல் இவ்வளவு பெரிய பாலத்தைக் கட்டுவதற்கு ரயில்வே துறை எப்படி அனுமதி வழங்கியது? அதன் பின்னால் உள்ள அரசியல் அழுத்தம் என்ன? இதைப் பற்றி எல்லாம் முழு விசாரணை செய்ய அரசு உத்தரவிட வேண்டும். ரயில்வே அமைச்சர் அதற்கு உரிய விளக்கத்தை வெளியிட வேண்டும். பாம்பன் பாலம் கடல்நீரின் ஈரப்பதத்திற்கும், காற்றின் தாக்கத்திற்கும், ரயிலின் வேகத்திற்கும் ஈடுகொடுக்கும் வகையில் கட்டப்பட வேண்டிய கட்டுமான தொழில்நுட்பமாகும். இதை அலட்சியப்படுத்துவது அந்த வழித்தடத்தில் தினந்தோறும் பயணிக்க உள்ள ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை அலட்சியப்படுத்துவதாகும்" என்று வலியுறுத்தி இருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications