Jai Bhim: பாம்பை தூக்கி போடுவோம்.. ஜாக்கிரதை.. சூர்யாவிற்கு ஆதரவாக குதித்த பழங்குடியின மக்கள்- வைரல்
மதுரை: மதுரையில் காட்டுநாயக்கன் பழங்குடி இன மக்கள் நடிகர் சூர்யாவிற்கு ஜெய் பீம் படத்திற்கும் ஆதரவாக களமிறங்கி உள்ளனர்.
Recommended Video
இயக்குனர் த.செ ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜெய் பீம் படம் அமேசான் பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. இந்த வருடத்தில் தமிழின் மிக முக்கியமான படமாக ஜெய் பீம் உருவெடுத்துள்ளது.
அந்த அளவிற்கு பாசிட்டிவ் ரிவ்யூக்களை இந்த படம் பெறுகிறதோ அந்த அளவிற்கு இன்னொரு பக்கம் விமர்சனங்களையும் ஜெய் பீம் படம் பெற்று வருகிறது. வன்னியர் ஜாதியினருக்கு எதிராக இந்த படத்தில் காட்சிகள் வைக்கப்பட்டு இருப்பதாக புகார் வைக்கப்பட்டு வருகிறது.

வன்னியர்கள்
இந்த படத்தின் காட்சி ஒன்றில் அக்னி கலசம் பயன்படுத்தப்பட்டதற்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களின் வன்னியர் குல சின்னத்தை இந்த காட்சி அவமதிப்பது போல இருப்பதாக வன்னியர் சங்கத்தினரும் புகார் அளித்துள்ளனர். அதேபோல் வில்லன் கதாபாத்திரத்திற்கு உண்மையான பெயரான அந்தோணி சாமி என்ற பெயரை வைக்காமல் குருமூர்த்தி என்று வைத்ததையும் பாமகவினர் எதிர்த்து உள்ளனர். இதன் காரணமாக இந்த படம் குறித்து தொடர்ந்து நிறைய விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

வழக்கு
படம் தொடர்பாக உடனே தயாரிப்பாளர் சூர்யா - ஜோதிகா மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று வன்னியர் சங்கம் வழக்கும் தொடுத்துள்ளது. இன்னொரு பக்கம் சூர்யாவின் படங்களை வட மாவட்டங்களில் திரையிட அனுமதிக்க மாட்டோம். அவரின் படங்களை திரையிட்டால் தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று வன்னியர் சங்கங்கள் சவால் விடுத்துள்ளன.

காட்டுநாயக்கன் பழங்குடி இன மக்கள்
இந்த நிலையில் மதுரையில் காட்டுநாயக்கன் பழங்குடி இன மக்கள் நடிகர் சூர்யாவிற்கு ஜெய் பீம் படத்திற்கும் ஆதரவாக களமிறங்கி உள்ளனர். மதுரையில் இன்று ஒன்று கூடிய காட்டுநாயக்கன் பழங்குடி இன மக்கள் சூர்யாவிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கையில் பாம்புகள், எலிகளுடன் இவர்கள் மதுரையில் போராட்டம் நடத்தினார்கள். சூர்யா எங்களுக்கு சினிமாவில் அடையாளம் கொடுத்து இருக்கிறார். எங்களை பற்றி இதுவரை சினிமாவில் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை.

சினிமா
எங்களை பற்றி யாருமே இதுவரை பேசவில்லை. சூர்யாதான் எங்களுக்கு அடையாளம் கொடுத்தார். அவருக்கு நன்றி. சூர்யாவிற்கு ஒன்று என்றால் அவருக்கு எதிரானவர்கள் மீது பாம்பை வீசவும் தயார். சூர்யாவை எதிர்ப்பது தவறு. அவருக்கு ஆதரவாக நாங்கள் எப்போதும் இருப்போம், என்று காட்டுநாயக்கன் பழங்குடி இன மக்கள் தெரிவித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications