மதுரையில் மாஸ் காட்டிய வீரர்கள்.. தெறிக்க விட்ட காளைகள்! வெற்றி பெற்றவர்கள் யார்? முழு லிஸ்ட் இதோ!
மதுரை: தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை பாலமேடு அவனியாபுரம் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று முடிவடைந்து இருக்கிறது. மூன்று ஊர்களிலும் வெற்றி பெற்றவர்கள் யார்? சிறந்த காளைகள் எது? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 14ஆம் தேதியும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி 17 ம் தேதியும் நடந்து முடிந்தது. இன்று புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை7.50 மணிக்கு தொடங்கியது.

போட்டியை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த போட்டியில் ஆன் லைன் மூலம் விண்ணப்பித்த 1200 காளைகளும் 900 மாடு பிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான டோக்கன் வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு கோலாகலம்:
போட்டியில் பங்கேற்பதற்காக வந்த 959 காளைகளில் மருத்துவ பரிசோதனையில் 3காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது மீதமுள்ள 956 காளைகள் கோவில் காளைகள் உட்பட 1000காளைகள் களம் கண்டது.இதேபோல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனை அலங்காநல்லூர் ஆரம்ப சுகாதார மையத்தில் நடைபெற்றது.
வீரர்கள் அதிருப்தி:
இன்றைய போட்டியில் பங்கேற்க 545 வீரர்கள் வந்திருந்த நிலையில் அவர்களுக்கான மருத்துவ பரிசோதனையில் மது அருந்தியது, உடல் தகுதியின்மை உள்ளிட்ட காரணங்களுக்காகவும் வயது மூப்பு காரணமாக அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கொன்ஆண்டனி உள்ளிட்ட 55 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் வீதம் 10 சுற்றுகள் நடத்துவதற்கு வசதியாக 490 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் நேரமின்மை காரணத்தால் 8 சுற்றுக்களோடு போட்டி நிறுத்தப்பட்டது.இதன் காரணமாக இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியில் 400 வீரர்கள் மட்டுமே பங்கேற்றனர் மீதமுள்ள 100 வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு:
அவனியாபுரத்தில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்ட நிலையில் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்தி 19 மாடுகள் பிடித்து முதலிடத்தை வென்றார். குன்னத்துறை சேர்ந்த திவாகர், திருப்புவனம் முரளிதரன் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர். வி.கே. சசிகலாவின் காளை முதல் பரிசை பெற்றது. இதற்காக ரூ.10 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. கார்த்திக்கு நிசான் காரும், இரண்டாவது இடத்தை பிடித்த திவாகருக்கு பைக்கும் பரிசாக வழங்கப்பட்டது.
பாலமேடு ஜல்லிக்கட்டு:
அடுத்ததாக பாலமேட்டில் 15ஆம் தேதி ஜல்லிக்கட்டு மாட்டுப் பொங்கல் அன்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் 14 காளைகளை அடக்கிய நத்தத்தைச் சேர்ந்த பார்த்திபன் முதலிடம் பிடித்தார். 12 காளைகளை அடக்கிய மஞ்சம்பட்டி துளசிராம், 11 காளைகளை அடக்கிய பொதும்பு பிரபாகரன் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர். இதில் பார்த்திபனுக்கு காரும், துளசிராமனுக்கு பைக்கும், பிரபாகரனுக்கு மின்சார ஸ்கூட்டரும் வழங்கப்பட்டது, சத்திரப்பட்டி சேர்ந்த விஜய தாங்க பாண்டியன் என்பவரது காலை சிறந்த காலையாக தேர்வு செய்யப்பட்டு டிராக்டர் வழங்கப்பட்டது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு:
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி 16ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. ஒன்பது சுற்றுகளில் ஆயிரம் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 20 காளைகளை அடக்கிய அபி சித்தர் முதலிடம் பிடித்தார். 13 காளைகளை அடக்கிய ஸ்ரீதர் இரண்டாவது இடத்தையும், 10 காளைகளை அடக்கிய மடப்புரம் விக்னேஷ் மூன்றாம் பரிசையும் பெற்றனர். அபி சித்தருக்கு காரும், ஸ்ரீதருக்கு ஷேர் ஆட்டோவும், மூன்றாம் இடத்தை பிடித்த விக்னேஷுக்கு எலக்ட்ரிக் பைக்கும் பரிசாக வழங்கப்பட்டது. சேலத்தைச் சேர்ந்த பாகுபாலி காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு அதன் உரிமையாளருக்கு டிராக்டர் வழங்கப்பட்டது.
-
Maridhas Arrest: யூடியூபர் மாரிதாஸ் கைது! மதுரை வீட்டில் குவிந்த சைபர் கிரைம் போலீஸார் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications