கர்நாடக குக்கர் குண்டு வெடிப்பு.. மதுரையில் தீவிர விசாரணையில் இறங்கிய என்ஐஏ அதிகாரிகள்! பரபரப்பு
மதுரை: கர்நாடகாவில் ஆட்டோ ரிக்ஷாவில் குக்கர் குண்டு வெடித்துச் சிதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில் இந்தாண்டு தொடக்கம் முதலே தொடர்ந்து சர்ச்சையான சம்பவங்கள் நடந்து வருகிறது. இதன் காரணமாகக் கடலோர மாவட்டங்களில் பதற்றம் தொடர்கிறது.
இந்தச் சூழலில் கடந்த வாரம் அங்கு மங்களூரில் ஓடும் ஆட்டோ திடீரென வெடித்துச் சிதறியது. இந்தச் சம்பவம் குறித்து வெளியாகும் தகவல்கள் பரபரப்பைக் கிளப்புவதாக உள்ளது.

கர்நாடகா
கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த வாரம் திடீரென ஓடும் ஆட்டோவில் திடீரென வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநரும், பயணியும் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. முதலில் இதை அனைவரும் விபத்து என்றே நினைத்தனர். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளும் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது. இதற்கிடையே இந்தச் சம்பவம் விபத்து இல்லை என்று கர்நாடக போலீசார் அறிவித்தனர்.

பயங்கரவாத தாக்குதல்
இந்தச் சம்பவம் விபத்தில்லை என்றும் பயங்கரவாத செயல் என்றும் போலீசார் தெரிவித்தனர். கர்நாடகாவில் பயங்கரவாத தாக்குதலுக்கான முயற்சி தான் இது என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய அமைப்புகளுடன் இணைந்து கர்நாடக போலீசாரும் விசாரிக்கும் என்று அம்மாநில டிஜிபி பிரவீன் சூட் தெரிவித்தார். முதற்கட்ட விசாரணையில், அந்த பயணியிடம் இருந்த ஆதார் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் போலியானது என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதன் பின்னரே இது பயங்கரவாத தாக்குதல் என்பது உறுதியானது.

குக்கர் வெடிகுண்டு
ஆட்டோவில் பயணித்த அந்த நபர் குக்கர் வெடிகுண்டை எடுத்துச் சென்றுள்ளார். அது எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியதில், இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. குக்கர் வெடிகுண்டை எடுத்துச் சென்ற அந்த நபர் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த ஷாரிக் (22) என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும், இவர் ஏற்கனவே இவரைத் தேசியப் பாதுகாப்பு முகமை அதிகாரிகள் தேடி வருவதும் தெரியவந்தது. மேலும், போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றதும் தெரிய வந்தது.

மதுரையில் விசாரணை
அவரது டவர் லோக்கேஷன்களும் இதை உறுதி செய்தது. தமிழகம் வந்த ஷாரிக் கோவை, மதுரை, ஊட்டி உள்ளிட்ட ஊர்களில் தங்கி இருந்ததும் விசாரணையில் உறுதியானது. இந்தச் சூழலில் மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக இப்போது என்ஐஏ அதிகாரிகள் மதுரையில் விசாரணை நடத்தினர். மதுரை டவுன் ஹால் ரோடு, கட்ராபாளையம் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், உணவகங்களில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

தமிழ்நாடு
முன்னதாக ஷாரிக் செல்போனை ஆய்வு செய்த கர்நாடக போலீசார், அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரிடம் தொடர்ந்து போனில் பேசி உள்ளதைக் கண்டறிந்தனர். மேலும், கோவையில் தான் பொய்யான ஆவணங்களைக் கொடுத்து அவர் சிம் கார்டு வாங்கி உள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக உதகையைச் சேர்ந்த சுரேந்தர் என்பவரிடம் கர்நாடக போலீசார் விசாரணை நடத்தினர். அந்த நபர் தான் ஷாரிக்திற்கு சிம் கார்டு வாங்கி கொடுத்தாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

காயம் இல்லை
கடந்த மாதம் தான் கோவையில் வெடிபொருட்களைக் கொண்ட கார் ஒன்று கோயில் அருகே வெடித்துச் சிதறியது. இந்த கார் வெடிப்பு சம்பவத்தில் காரில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். இரவு நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில் நல்வாய்ப்பாக வேறு யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இது பயங்கரவாத தாக்குதல் முயற்சி என்று கூறி, இந்த வழக்கை என்ஐஏவிடம் மாற்றப்பட்டு உள்ளது. இந்தச் சம்பவம் ஓய்வதற்குள்ள, மீண்டும் மங்களூரில் ஆட்டோ வெடிப்பு சம்பவம் நடந்து பரபரப்பைக் கிளப்பி உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications