"மதுரையில் வெங்கடேசன்னு ஒரு ஆள் இருக்கான்.." அமைச்சர் நேரு பேச்சால் அதிர்ந்து போன மா.கம்யூனிஸ்ட்
மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.வெங்கடேசனை, "அவன்.. இவன்" என்று ஒருமையில் பேசி இருக்கிறார் தமிழக நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் கே.என். நேரு. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
Recommended Video
மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பியான, வெங்கடேசன், தமிழர் மற்றும் தமிழ் நலம் சார்ந்த பல்வேறு விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்பி வருபவர்.
சமூக வலைத்தளங்களிலும் மிகவும் துரிதமாக செயல்பட கூடியவர். மத்திய அரசுக்கு தமிழ் சார்ந்த பல்வேறு விஷயங்களுக்காக அழுத்தமாக கேள்விகளை முன்வைத்து வருபவர்.

மதுரை விமான நிலையம்
இன்னொரு பக்கம் கே.என்.நேரு திமுகவின் சீனியர் அமைச்சர். முதல்வர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர்களில், இவரும், ஒருவர். ஆனால் இவர்களுக்குள் இப்படி ஒரு கசப்பு ஏற்படுவதற்கு கே.என்.நேரு மதுரை விமான நிலையத்தில் அளித்த ஒரு பேட்டி காரணமாக மாறிவிட்டது.

அந்த ஆள்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக ஒரு கேள்வியை அமைச்சர் நேருவிடம் நிருபர்கள் முன்வைத்தபோது, "இந்த கேள்வியை சம்பந்தப்பட்டவர்களிடம் கேளுங்கள்.. மதுரையில் வெங்கடேசன்னு ஒரு ஆள் இருக்கான்.. அந்த ஆள் கிட்ட கேளு.." என்று நேரு தடாலடியாக பேசியிருக்கிறார். இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்
இது தொடர்பாக, மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலர் கணேசன், மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக, மதுரை விமான நிலையத்தில், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேருவிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. மாறாக, 'சம்பந்தப்பட்டவர்களை விட்டு என்னிடம் வந்து கேட்கிறீர்கள். மதுரையில் வெங்கடேசன் என்ற எம்.பி. ஒருவன் இருக்கிறான், அவனிடம் கேளுங்கள்' என, நேரு பதில் அளித்துள்ளார்.

கூட்டணி கட்சி
மக்களால் தேர்வு செய்யப்பட்ட, கூட்டணி கட்சியின் எம்பியை, ஆளுங்கட்சி அமைச்சர் பொது வெளியில் இவ்வாறு பேசியுள்ளது கண்டனத்திற்கு உரியது. முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications