சங்கி என்று விமர்சித்த அமீர்.. அவருக்கும் முருகன் மாநாட்டுக்கும் என்ன சம்பந்தம்.. எல்.முருகன் கேள்வி
மதுரை: இயக்குநர் அமீருக்கும், முருகன் மாநாட்டிற்கும் என்ன சம்பந்தம் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பி இருக்கிறார். முருகன் மாநாட்டிற்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத இயக்குநர் அமீர், இந்த மாநாடு தொடர்பாக கருத்து சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறிய எல்.முருகன், இது முருகனின் பக்தர்களால் நடத்தப்படும் மாநாடு என்றும் கூறியுள்ளார்.
மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு நடைபெற்று வருகிறது. அறுபடை முருகன் வீடுகளின் மாதிரிகள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருப்பதால், அதனை பார்வையிட ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். அதேபோல் முருகன் மாநாட்டிற்கு பாஜக தரப்பில் மற்ற மாவட்டங்களில் இருந்து வண்டிகளில் அழைத்து வரப்படுகின்றனர்.

அமீர் பேட்டி
இதனிடையே 2 நாட்களுக்கு முன்பாக மதுரையில் முருகன் மாநாட்டை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. அதில் விசிக தலைவர் திருமாவளவன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அந்த மனித சங்கிலி போராட்டத்தில் இயக்குநர் அமீர் கலந்து கொண்டார். அப்போது அமீர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இந்த மனித சங்கிலியின் நோக்கம், முருகன் எங்களுக்கு எதிரானவர் அல்ல.
சங்கிகள்
முருகன் பெயரால் அரசியல் செய்யும் சதிகாரர்கள் தான் எங்களுக்கு எதிரானவர்கள். இங்கு கூடியுள்ள யாருமே முருகனுக்கு எதிரானவர்கள் அல்ல. முருகன் பெயரால் கலவரம் செய்ய துடிக்கும் சங்கிகளுக்கு எதிரானவர்கள் என்பதைதான் சொல்வதாக தெரிவித்தார். அமீரின் பேச்சு சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகியது.
மதுரையில் எல் முருகன்
எந்தக் கட்சியையும் சாராது இயக்குநர் அமீர் தொடர்ந்து முற்போக்கு கருத்துகளை பேசி வருகிறார். இதனால் பாஜகவினர் இயக்குநர் அமீருக்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வந்தனர். இந்த நிலையில் மதுரையில் நேற்றிரவு முருகன் மாநாடு திடலை பார்வையிட்ட மத்திய இணையமைச்சர் எல்.முருகன், இயக்குநர் அமீருக்கு பதில் அளித்துள்ளார்.
எல்.முருகன் பேட்டி
அதில் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நம்ம ஒரு மாநாட்டை நடத்தி கொண்டிருக்கும். இந்த மாநாடு பற்றி சம்பந்தம் இல்லாத ஒருவர் மாநாடு குறித்து கருத்து சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இயக்குநர் அமீருக்கும், இந்த மாநாட்டுக்கும் என்ன சம்பந்தம்? துளியளவும் சம்பந்தம் கிடையாது. இது முருகன் பக்தர்களால் நடத்தப்படும் மாநாடு.
என்ன சம்பந்தம்?
முருகனின் பக்தர்களை இழிவாக பேசுவதை, பக்தர்கள் பொறுத்தி கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்தார். ஏற்கனவே பாஜக நிர்வாகியான இயக்குநர் பேரரசு, இஸ்லாமியரான அமீருக்கும் முருகன் மாநாட்டிற்கு என்ன சம்பந்தம்.. வேறொரு மதத்தைச் சேர்ந்த கடவுளை வணங்கும் அமீருக்கு இந்து மதத்திற்குள் என்ன வேலை என்று ஆவேசமாக பேசியது குறிப்பிடத்தக்கது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications