மதுரை மீனாட்சியம்மன் கோவில் கோபுரத்தில் மின்னல் தாக்கி சேதம்!
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவில் கிழக்கு கோபுரத்தில் மின்னல் தாக்கியதில் சேதம் ஏற்பட்டதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையில் நேற்று காலை முதல் வெயில் குறைவாக இருந்ததுடன் குளிர்ந்த காற்றும் வீசியது. பல்வேறு பகுதிகளில் லேசான மழையும் பெய்தது. மீண்டும் மாலை நேரத்திலும் சாரல் மழை பெய்தது. ஆனால் இரவு 9 மணியளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரத்தில் சேதம் ஏற்பட்டது.

மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள 4 ராஜ கோபுரங்களில் கிழக்கு கோபுரம் மிகவும் பழமையானது. மாரவர்மன் சுந்தரபாண்டியன் என்ற அரசனால் கடந்த 1216-1238 ஆண்டுக்குள் இந்த கோபுரம் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்த கிழக்கு ராஜகோபுரத்தின் உச்சியில் இருந்த வடக்கு நாசி தலத்தின் ஒரு பகுதியை மின்னல் தாக்கியது. இதனால் அதன் ஒரு பகுதி மட்டும் கீழே விழுந்தது.
தகவலறிந்த கோவில் இணை கமிஷனர் ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். கிழக்கு கோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களிலும் இடிதாங்கி பொருத்தப்பட்டு இருந்ததால் பெருத்த சேதம் தவிர்க்கப்பட்டது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications