Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாணவியை காதலித்து கடத்தி..6 மாசம் ஆச்சு! இனி மீட்டு என்ன பிரயோஜனம்? காவல்துறையை விளாசிய நீதிபதிகள்

Subscribe to Oneindia Tamil

மதுரை: சிறுமிகள் காணாமல் போனதாக பெறப்படும் புகார்களில் போலீசாரின் நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. சிறுமிகள் காணாமல் போன வழக்குகளில் முறையாக விசாரணை நடத்த வேண்டும். முறையாக விசாரணை நடத்தாவிடில் விசாரணை அதிகாரியையும் சேர்த்து வழக்குப்பதிய உத்தரவிட நேரிடும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

திருமணமான 32 வயது நபரால் கடத்தப்பட்ட 16 வயது சிறுமியை மீட்கக் கோரி சிறுமியின் பெற்றோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இதேபோல் தங்கள் குழந்தைகளை காணவில்லை அவர்களை மீட்க வேண்டுமென பானு, நாகலட்சுமி, முத்தாயி உள்ளிட்டோர் சென்னைஉயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

Madras High Court madurai bench Condemns Tamil Nadu Police

இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன், ராஜசேகர் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, மாயமான சிறுமிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விசாரணை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறை சார்பில் வாதிடப்பட்டது.

அப்போது சிறுமிகளின் பெற்றோர் தரப்பில் 6 மாதம் கடந்தும் தனது மகளை மீட்கவில்லை என கூறப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், வழக்கு விசாரணை தொடர்பாக தமிழகம் முழுவதும் காவல் துறையினரிடையே ஒருங்கிணைப்பு இல்லையா? CELL PHONE TOWER SIGNAL மூலம் ஓடி போன மைனர் காதலர்களர்கள் எங்கு உள்ளனர் ? என கண்டறிந்து.தொடர்புடைய காவல் நிலையத்தில் கூறி அவர்களை கைது செய்ய முடியாதா?

ஓடிப்போன இளம் காதல் ஜோடிகள் குடும்பம் நடத்தி வந்த பிறகு, அவர்களை 6 மாதம் கழித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதினால் என்ன பிரோயஜனம்? என கேள்வி எழுப்பினர். மேலும் சிறுமிகள் காணாமல் போன வழக்குகளில் முறையாக விசாரணை நடத்த வேண்டும். முறையாக விசாரணை நடத்தாவிடில் விசாரணை அதிகாரியையும் சேர்த்து வழக்குப்பதிய உத்தரவிட நேரிடும். காணாமல் போன சிறுமியை கண்டுபிடித்து ஆஜர்படுத்த திருச்சி மண்டல ஐ.ஜி.க்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது. நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் காணாமல் போன சிறுமிகளை மீட்க வேண்டும்.

சிறுமிகள் மாயம் தொடர்பான வழக்குகளில் போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. மக்களின் பாதுகாப்புக்காகத் தான் காவல்துறை உருவாக்கப்பட்டது.ஆனால், காவல் துறையின் செயல்பாடுகள் அவ்வாறு இல்லை. தங்களை பலப்படுத்திக் கொள்ளவும் வளப்படுத்திக் கொள்ளவுமே முக்கியம் அளிப்பது போல் காவல் துறையின் செயல்பாடு உள்ளன.

சிறுமிகள் மாயமான அல்லது கடத்தப்பட்ட புகார் வந்தால் உடனடியாக வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் விசாரணை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும். மாணவி மாயமான வழக்குகளில், விசாரணை அதிகாரி மாணவிகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+