டெண்டர் கால அவகாசம் நீட்டிப்பு.. மதுரை எய்ம்ஸ் மருத்துவனை கட்டுமானம் குறித்து முக்கிய தகவல்! என்ன?

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணியை மேற்கொள்ளும் கட்டுமான நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்கும் வகையிலான முன்தகுதி விண்ணப்ப கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மதுரை தோப்பூரில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. சுமார் 224.24 ஏக்கரில் ரூ.1,264 கோடியில் மருத்துவமனை அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

Madurai AIIMS Hospital construction tender deadline extension upto October 6,

2019ல் ஜனவரி மாதம் 27-ந் தேதி அன்று மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு பணி என்பது தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. காம்பவுண்ட் சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. குறிப்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்களுக்கும், திமுக எம்பிக்களுக்கும் இடையே காரசாரமான விவாதம் என்பது நடந்து வந்துள்ளது. இந்த வேளையில் மதுரை 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடம் கடன் கிடைப்பதில் தாமதம், தமிழக அரசு நிலம் ஒப்படைப்பதில் ஏற்பட்ட தாமதம் ஆகியவையே பணி தொடங்கப்படாததற்கு முக்கிய காரணம் என மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில் தான் மதுரை எய்ம்ஸ் பணிக்கான மதிப்பீடு என்பது ரூ.1977.80 கோடியாக உயர்த்தப்பட்டது. தற்போது ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடமிருந்து நிதி கிடைக்கப்பட்டதையடுத்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக 18ம் தேதி வரை ஒப்பந்த விண்ணப்பம் கோரப்பட்டது.

இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு முன்தகுதி விண்ணப்ப கால அவகாசம் அக்டோபர் 6 வரை நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கூடுதல் நிறுவனங்களுக்கு வாய்ப்பு ஏற்படலாம்.

மேலும் மதுரை ஏய்ம்ஸ் மருத்துவமனையை பொறுத்தமட்டில் 870 படுக்கைகள் இடம்பெற உள்ளது. மேலும் 30 படுக்கையுடன் கூடிய ஆயுர்வேத சிகிச்சைக்கான அறை, 150 எம்பிபிஎஸ் மாணவர்கள், செவிலியர்கள் படிக்கும் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் மாணவ-மாணவிகளுக்கான தனித்தனி விடுதிகள், இயக்குனர்களுக்கான இல்லம், பணியாளர்களுக்கான குடியிருப்புகள், வணிக வளாகம், ஆகியவை கட்டப்பட உள்ளது.

இந்த பணிகள் அனைத்தும் 33 மாதத்தில் முடிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியை முடித்து 2026ம் ஆண்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிபந்தனை கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு முன்தகுதி விண்ணப்ப கால அவகாசம் அக்டோபர் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+