வெள்ளத்தில் தத்தளிக்கும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை.. உதயநிதி புகைப்படத்தை விட வைரலாகும் "இந்த" படம்
மதுரை: மதுரையில் "கட்டப்பட்ட" எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது பெய்து வரும் வெள்ளத்தில் தத்தளிப்பதாக சமூகவலைதளங்களில் புகைப்படம் வைரலாகி வருகிறது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 45 மாதங்களில் இந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அடிக்கல் நாட்டி 30 மாதங்களுக்கு மேலாகியும் இது வரை எந்த பணியும் தொடங்கப்படவில்லை. நிதி ஒதுக்கீட்டில் இழுபறியால் சுற்றுச்சுவருடன் கட்டுமானப் பணி நின்று போனது.

மதுரை மாவட்டம்
இந்த நிலையில் கடந்த சட்டசபை தேர்தலின் போது மதுரை மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், மதுரையில் 3 ஆண்டுகளுக்கு முன் அதிமுகவும் பாஜகவும் சேர்ந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டிக் கொடுத்தார்கள். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா. அதை கையோடு எடுத்து வந்துட்டேன் என கூறி எய்ம்ஸ் என எழுதப்பட்ட செங்கல்லை காண்பித்தார். உடனே அங்கிருந்தவர்கள் சிரித்தார்கள்.

வெற்றி பரிசு
கடந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்றவுடன் நேராக தந்தை ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் உதயநிதி. அப்போது அவரிடம் எய்ம்ஸ் செங்கல்லை கொடுத்து விரைந்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணியை தொடங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஸ்டாலினும் அப்படியே செய்வதாக உறுதியளித்திருந்தார்.

உதயநிதி
உதயநிதி எய்ம்ஸ் செங்கல்லை காட்டிய புகைப்படம் வைரலானது. இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து செங்கல்லை திருடிவிட்டதாக உதயநிதி மீது பாஜக வழக்குப் பதிவு செய்திருந்தது. உதயநிதி ஸ்டைலில் பீகார் மாநிலம் தர்பங்காவிலும் எய்ம்ஸ் கட்டுமானம் தாமதமாவதை கண்டித்து அப்பகுதி மக்கள் செங்கல்லில் எய்ம்ஸ் என எழுதி ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.

மீண்டும் வைரல்
இந்த நிலையில் இந்த செங்கல் மீண்டும் வைரலாகியுள்ளது. அதாவது மதுரையில் பெய்த மழையில் எய்ம்ஸ் மருத்துவமனை வெள்ளத்தில் தத்தளிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதில் ஒரு செங்கல் முக்கால்வாசி தண்ணீரில் மூழ்கியிருப்பது போல் காணப்படுகிறது. இந்த படம் வைரலாகி வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications