திருப்பரங்குன்றம் விவகாரம்.. உண்ணாவிரதம் மேற்கொள்ள உயர்நீதிமன்ற கிளை அனுமதி!
மதுரை: திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் உள்ள தூணில், தீபமேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் நடத்த அனுமதி கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு நீதிமன்றம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
திருப்பரங்குன்றம் ஊர் மக்கள் சார்பாக இரா.பிரபு என்பவர் தாக்கல் செய்த மனுவில், காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட சன்னதி தெருவில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத இருக்க நீதிபதி ஸ்ரீமதி அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள உச்சி பிள்ளையார் கோயில் அருகே ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருநாளில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. ஆனால், மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்துத்துவா அமைப்பை சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி வழங்கியிருந்தார். இந்த அனுமதிக்கு எதிராக தற்போது உச்ச நீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு நாடியிருக்கிறது.
தர்காவை மலையிலிருந்து இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று எச்.ராஜா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், தர்கா அருகில் உள்ள தூணில் எப்படி தீபம் ஏற்ற அனுமதிப்பது? என்பது ஜனநாயக அமைப்புகளின் கேள்வியாக இருக்கிறது. மட்டுமல்லாது வரலாற்று சான்றுகளில் உச்சி பிள்ளையாருக்கு அருகில் உள்ள தூண்தான் தீபம் ஏற்றும் தூண் எனவும் கூறி வருகின்றனர். தர்காவுக்கு பக்கத்தில் உள்ள தூண், ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நில அளவு தூண் என்றும் கூறுகின்றனர்.
இப்படியாக இரு தரப்பினருக்கம் இடையில் மோதல் வெடித்திருக்கும் நிலையில், திருப்பரங்குன்றம் ஒட்டியுள்ள கிராம மக்கள் சார்பாக, தர்காவுக்கு பக்கத்தில் உள்ள தூணில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று வழங்கப்பட்ட உத்தரவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கின்றனர். இதற்காக இரா.பிரபு என்பவர் காவல் நிலையத்தில் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டதால் உயர்நீதிமன்ற கிளையை நாடியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. இதற்கு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. "தேவையற்ற பிரச்சனை ஏற்படும். மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டில் இருக்கிறது. மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வருகிறது. எனவே, அந்த வழக்கு விசாரணைக்கு பிறகு அனுமதி வழங்க வேண்டும்" என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பதிலுக்கு மனுதாரர்கள் தரப்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி கருத்து தெரிவிக்கவும், அறவழியில் போராடவும் எங்களுக்கு உரிமை இருக்கிறது. எனவே எங்களுக்கு அனுமதி வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஸ்ரீமதி, அற வழியில் போராட்டங்களை முன்னெடுக்க உரிமை உள்ளது. எனவே அவர்களுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படுவதாக உத்தரவிட்டார். உண்ணாவிரத போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்ப கூடாது, அரசியல் சார்பு இருக்க கூடாது, 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், மந்திரங்களை உச்சரிக்கலாம். ஒரு மைக் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும், காலை 9 மணி தொடங்கி மாலை 5 மணி வரை மட்டுமே உண்ணாவிரதம் திருப்பரங்குன்றம் மலையில் வேல் மண்டபம் அருகே நடத்தப்பட வேண்டும் என்று நீதிபதி நிபந்தனைகளை பிறப்பித்துள்ளார்.
-
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications