குலுங்குது மதுரை.. மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா.. இன்று கோலாகல கொடியேற்றம்.. திரண்ட ஜனம்
மதுரை: உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா, இன்று 12ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்குகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
சித்திரை மாதத்தை சிறப்பிக்கக்கூடிய மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை பெருவிழா ஒவ்வொரு வருடமும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.. மொத்தம் 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்... இந்த சித்திரை திருவிழாவையொட்டி, மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

திருவிழா: அதுவும் இல்லாமல், தமிழகத்தில் நடக்கும் திருவிழாக்களிலேயே முதன்மையான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவாகும்.. எப்போதுமே சித்திரை மாதம் அமாவாசை முடிந்ததுமே, கார்த்திகை நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் இந்த விழா ஆரம்பமாகும்..
அந்தவகையில், இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவானது, இன்றைய தினம் நடக்க போகிறது. இன்று 12-ந்தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.. இதையொட்டி, சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு காலை 9.55 மணி முதல் 10.19 மணிக்குள் மீனாட்சி-சுந்தரேசுவரர் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெறும்.
தேரோட்டம்: திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் ஏப்ரல் 19ம் தேதி நடக்க போகிறது. 20ம் தேதி மீனாட்சி அம்மன் திக் விஜயமும், ஏப்ரல் 21 ம் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. ஏப்ரல் 22ம் தேதி தேரோட்டம் நடைபெறும். ஏப்ரல் 23ம் தேதி, திருவிழாவின் உச்ச நிகழ்வான கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் வைபவம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த விழாக்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். விழா நடைபெறும் 12 நாள்களிலும் மீனாட்சி அம்மன், பல்வேறு விதமான வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருவார்.
ரிசர்வேஷன்: முன்னதாக, மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் மீது பாரம்பரிய முறைப்படி தண்ணீரை பீய்ச்சி அடிக்க நாளை முதல் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.. கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச, 20ம் தேதி வரை முன்பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தோல் பை மூலம் தண்ணீர் பீய்ச்ச, நேர்த்திக்கடன் செலுத்த கோயில் நிர்வாகத்திடம் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications