அண்ணாமலை தொலைபேசி உரையாடல்.. எடிட் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு.. மதுரை சைபர் கிரைமில் புகார்!
மதுரை: பாஜக தலைவர் அண்ணாமலையும், தானும் பேசிய ஆடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளார்கள் என மதுரை மாநகர பாஜக தலைவர் சுசீந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மதுரை விமான நிலைய பகுதியில் கடந்த 13ஆம் தேதியன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சம்பவத்தன்று பாஜக தலைவர் அண்ணாமலை, மதுரை புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரனும் பேசியது போன்ற ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகியது.

இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிய ஆடியோவை எடிட் செய்து வெளியிட்ட டாக்டர்.சரவணனிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கோரி, மதுரை மாநகர பாஜக தலைவர் சுசீந்திரன் இன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் சுசீந்திரன் பேசியவதாவது: நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய விவகாரத்தின் பிண்ணனியில் திட்டமிட்ட சூழ்ச்சி உள்ளது. டாக்டர்.சரவணன் தனது மருத்துவமனையில் செய்த மோசடியில் தற்காத்துகொள்ள மாநில தலைவர் மீது அவதூறு பரப்புகிறார், சம்பவத்தன்று ராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை செலுத்த சென்றபோது நானும், அண்ணாமலையும் ஒரே காரிலயே பயணித்தோம், அப்போது டாக்டர்.சரவணன் போனில் தொடர்புகொண்டு பேசினார்.
அப்போது நாங்கள் இருவரும் பேசியவற்றை ஆடியோவாக பதிவுசெய்து சமூக வலைதளங்களில் எடிட் செய்து மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு பரப்பும் நோக்கில் சரவணன் வெளியிட்டுள்ளார். நானும், அண்ணாமலையும் ஒரே காரில் இருந்துகொண்டு எப்படி அலைபேசியில் பேசமுடியும் என சுசீந்திரன் கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் கார் மீது காலணி வீசிய விவகாரத்தில், விமான நிலையத்திற்கு செல்லாத பாஜகவினரை கூட காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் கடுமையான அழைத்துசென்று மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். மதுரையில் நடைபெறும் திமுக அரசின் செயல்களை நாள்தோறும் மத்திய உளவுத்துறைக்கும், அமித்ஷாவிற்கும் அவ்வப்போது தகவல் அளித்து வருகிறோம். டாக்டர்.சரவணனின் பிண்ணனியில் திமுக அரசு இருந்துகொண்டு இதுபோன்ற அவதூறுகளை பரப்பி வருவதாக மதுரை மாநகர பாஜக தலைவர் சுசீந்திரன் தெரிவித்தார்.
-
கொந்தளித்த அண்ணாமலை.. வளர்த்த கிடா மார்பில் பாயுதே.. நீட் மறுதேர்வால் மத்திய அரசுக்கு வார்னிங் -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
போலீஸே உடலை அடக்கம் பண்ணிடும்! ஆகாஷ் வழக்கில் நீதிமன்றம் எச்சரிக்கை! விடாப்பிடியாய் பெற்றோர்! பரபர -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
மதுரையில் வேலை.. சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 127 பணியிடங்கள்! 12 ஆம் வகுப்பு தகுதி தான்!












Click it and Unblock the Notifications