ஜனவரியில் எய்ம்ஸ் திறப்பு.. மதுரையில் முந்திக் கொள்ளும் திமுக.. டிசம்பர் 7ல் வெளியாகும் அறிவிப்பு!
மதுரை: மதுரையில் ஜனவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் கட்ட வளாகம் திறக்கப்பட உள்ள நிலையில், திமுக டிசம்பர் மாதத்திலேயே பிரம்மாண்ட அறிவிப்பை வெளியிட தயாராகிவிட்டது. டிசம்பர் 7ஆம் தேதி அப்போலோ மேம்பாலம் திறப்புக்காக மதுரை வரும் முதல்வர் ஸ்டாலின், அத்துடன் முதலீட்டாளர்கள் மாநாட்டையும் நடத்த முடிவு செய்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அந்த வகையில் தென் மாவட்டங்களில் அதிக தொகுதிகளில் வெற்றியை பெற வேண்டும் என்பதில் திமுக குறியாக இருக்கிறது. குறைந்தபட்சம் கடந்த முறை அளவிற்கான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று திட்டமிட்டு வருகிறது.

அதனால் மதுரைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மதுரைக்கு திமுக ஆட்சியில் கீழடி அருங்காட்சியகம், ஜல்லிக்கட்டு மைதானம் உள்ளிட்டவை செய்து முடிக்கப்பட்டுள்ளன. அதேபோல் டைடல் பார்க் அறிவிக்கப்பட்டு கட்டுமான பணிகள் வேகம் எடுத்திருக்கின்றன. இதனிடையே கோரிப்பாளையம் மற்றும் அப்போலோ மருத்துவமனை ஆகிய 2 மேம்பால பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
தேர்தலையொட்டி இன்னும் சில அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மதுரையில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட வளாகம் ஜனவரி மாதம் திறக்கப்பட உள்ளது. பொங்கலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வந்து திறந்து வைப்பார் என்று கூறப்படுகிறது. இது தென் மாவட்டங்களில் பாஜகவுக்கு கூடுதல் வலு சேர்க்கும் என்று அக்கட்சியின் நம்புகின்றனர்.
ஆனால் ஜனவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பதற்கு முன்பாகவே மதுரைக்கு இன்னும் சில அறிவிப்புகளை திமுக இந்த ஆட்சியில் வெளியிட உள்ளது. டிசம்பர் 7ஆம் தேதி அப்போலோ மருத்துவமனை மேம்பாலத்தை திறந்து வைக்க முதல்வர் ஸ்டாலின் மதுரைக்கு வரவுள்ளார். அன்றைய நாளிலேயே மதுரையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது.
ஏற்கனவே தமிழக அரசு தரப்பில் தூத்துக்குடி, ஒசூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு மிகப்பெரிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. இதனால் டிசம்பர் 7ல் மதுரையில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் அதிக அளவிலான முதலீடுகளும் ஈர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஐடி துறை மற்றும் செமி கண்டக்டர் துறைகளில் இருந்து அதிக முதலீடுகள் வரலாம் என்று கருதப்படுகிறது. அதேபோல் மதுரையில் தொழில் தொடங்குவதற்கு இடம் பற்றாக்குறை இருப்பதாக அமைச்சர் டிஆர்பி ராஜா கூறி இருந்தார். அந்த சிக்கலை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications