மதுரையில் ஒரு சண்டீகர்! விடுதி மாணவிகள் குளிப்பது, உடை மாற்றுவதை வீடியோவாக எடுத்த பிஎட் மாணவி கைது
மதுரை: மதுரையில் உள்ள விடுதி ஒன்றில் பெண்கள் குளிக்கும் காட்சிகள், உடைமாற்றும் காட்சிகளை வீடியோவாக எடுத்து மருத்துவருக்கு அனுப்பிய மாணவி கைது செய்யப்பட்டார்.
பஞ்சாப் மாநிலம் சண்டீகர் பல்கலைக்கழகத்தில் இதே போல் விடுதியில் தங்கியிருந்த 60 மாணவிகள் குளிக்கும் வீடியோக்களை மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருக்கு அனுப்ப, அவரும் அதை சமூகவலைதளங்களில் பதிவிட்ட காட்சிகளால் அங்கு போராட்டம் நடைபெற்று வந்தது.
அது போன்றதொரு சம்பவம் தற்போது மதுரையிலும் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் ஆஷிக் (31). எம்பிபிஎஸ் முடித்துவிட்டு கமுதியில் உள்ள முஸ்லீம் பஜாரில் கிளீனிக் நடத்தி வருகிறார்.

கிளீனிக்
இவருக்கு திருமணமாகிவிட்டது. இந்த கிளீனிக் இருக்கும் பகுதியை சேர்ந்தவர் பிஎட் மாணவி. இவர் மதுரையில் அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி பிஎட் படித்து வருகிறார். இந்த மாணவிக்கு ஆஷிக்குடன் நட்பு இருந்துள்ளது. இந்த நிலையில் இந்த மாணவி தனது விடுதியில் படிக்கும் சக மாணவிகள் குளிப்பது, உடை மாற்றும் காட்சிகளை வீடியோவாக எடுத்து அதை ஆஷிக்கிற்கு வாடிக்கையாக அனுப்பி வந்ததாக தெரிகிறது.

போனில் வீடியோ எடுக்கும் காட்சி
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த மாணவி போனில் வீடியோ எடுப்பதை சக மாணவி ஒருவர் பார்த்துவிட்டு உனே அதிர்ச்சி அடைந்து விடுதி காப்பாளரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பிஎட் மாணவியின் செல்போனை வாங்கி பார்த்த போது அதில் பல மாணவிகள் குளிக்கும் வீடியோவும் துணி மாற்றும் வீடியோவும் இருந்துள்ளன.

மாணவியும் டாக்டரும் கைது
இதையடுத்து விடுதி மேலாளர் மதுரை அண்ணாநதர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து அந்த மாணவியை பிடிதது போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் அந்த வீடியோக்களை மருத்துவர் ஆஷிக்கிற்கு அந்த மாணவி அனுப்பியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து மாணவியையும் ஆஷிக்கையும் சைபர் கிரைம் போலீஸ் கைது செய்தது.

மருத்துவரிடம் விசாரணை
ஆஷிக் அந்த வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டாரா இல்லை அதை வேறு யாருக்காவது காசுக்காக விற்றாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது. அது போல் வீடியோ எடுத்த மாணவி, ஆபாச வீடியோக்களை கொடுத்து ஆஷிக்கிடம் இருந்து எந்த மாதிரியான பலன்களை பெற்றார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.
-
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications