திருப்பரங்குன்றம் சந்தனக்கூடு கட்டுப்பாடுகளுக்கு எதிரான அப்பீல்.. அவசரமாக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு!
மதுரை: திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழா கட்டுப்பாடுகளுக்கு எதிரான மேல்முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரை மறுத்துவிட்டது. தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க தர்கா தரப்பு முறையிட்டது. தர்கா மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.
மதுரையை சேர்ந்த மாணிக்க மூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'திருப்பரங்குன்றம் மலையில் டிசம்பர் 21 முதல் ஜனவரி 6 வரை கந்துாரி மற்றும் சந்தனக்கூடு விழாவை சிக்கந்தர் தர்கா நிர்வாகம் நடத்துகிறது. விலங்கு பலியிடுதல் மற்றும் அசைவ உணவு பரிமாறுதல் கந்துாரியின் ஒரு முக்கிய பகுதி. மலையில் கந்துாரி விழா நடத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரி இருந்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார்.

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாஸ்கரன், தற்போதைய திருவிழா உரிமை பிரச்சனை, சந்தனக்கூடு உருஸ் திருவிழாவை மட்டுமே சார்ந்தது. ஜனவரி 6ல் சந்தனக்கூடு திருவிழாவிற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். கந்துாரி மகா உற்சவத்திற்கு அனுமதி வழங்கப்படாது. ஏற்கனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு கண்டிப்பாக பின்பற்றப்படும். விலங்கு பலியிடுதல், அசைவ உணவு தயாரித்தல் கூடாது எனத் தெரிவித்தார்.
தர்கா தரப்பு வழக்கறிஞர் வாஞ்சிநாதன், "மலையில் கந்துாரி விழா நடத்தக்கூடாது. தரைப்பகுதியில் கந்துாரி நடத்தலாம். கந்துாரி என்ற வார்த்தைக்கு தடையில்லை" என்றார். அதற்கு நீதிபதி, "ஏற்கனவே இரு தரப்பின் உரிமைகள் பாதிக்கப்பட்டதற்கு எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?" எனல் கேள்வி எழுப்பினார். அதற்கு தர்கா தரப்பு வாஞ்சிநாதன், "அரசு எங்களை தான் ஒடுக்குகிறது. தர்காவிற்கு சொந்தமான இடத்தில் தான் கொடியேற்றப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரடில், உருஸ் திருவிழாவை மட்டுமே தர்கா நிர்வாகம் நடத்த வேண்டும். விழாவில், 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். விலங்குகளை பலியிடக்கூடாது. அசைவ உணவு சமைக்கக்கூடாது. இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். சட்டம் - ஒழுங்கை போலீசார் நிலைநாட்ட வேண்டும். கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோவில் மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் ஜனவரி 20 ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்நிலையில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வில் தர்கா தரப்பில் இன்று (ஜனவரி 5) வழக்கறிஞர் ஆஜராகி, சந்தனக்கூடு விழாவில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரும் மேல்முறையீடு மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கின் மேல்முறையீடு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட இருப்பதாகவும், அந்த வழக்கிலும் தர்கா தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டுள்ளது. எனவே தர்கா மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது. அந்த உத்தரவுக்கு பின்னர் முறையீடு இருந்தால் முன்வைக்கலாம் எனத் தெரிவித்தனர்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications