“இந்து முன்னணி என்றால் ஒரு காலத்தில் மரியாதை இருந்தது.. தற்போது மோசமாகிவிட்டது” - மதுரை ஐகோர்ட் கிளை

Subscribe to Oneindia Tamil

மதுரை: பெண் காவலரிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட வழக்கில் இந்து முன்னணி நிர்வாகிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. மட்டுமல்லாது, காவல்துறையே பார்த்து பயப்படும் அளவுக்கு இந்து முன்னணி மோசமாகிவிட்டது என நீதிபதி கவலை தெரிவித்திருக்கிறார்.

தஞ்சாவூரில் ஆஞ்சநேயர் கோயிலுக்கு முன்பு அமர்ந்து சிலர் மது குடித்த வருவதாகவும், அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுப்பதாகவும் காவல்துறையினருக்கு அழைப்பு வந்திருக்கிறது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு ஆதிநாயகி என்கிற பெண் காவலர் சென்றிருக்கிறார். கோயிலின் முன்பு குடித்துக்கொண்டிருந்தவர்களை அப்புறப்படுத்த முயன்றிருக்கிறார். ஆனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து, பெண் காவலரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டிருக்கின்றனர்.

Madurai High Court bench criticizes that Hindu Munnani has become so bad that police are afraid of it

இது குறித்து பெண் காவலர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்திருக்கிறார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், அநாகரீமாக நடந்துக்கொண்ட மூவரையும் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு, வைத்து விசாரித்ததில் மூவரில் ஒருவர் இந்து முன்னணி நிர்வாகி குபேந்திரன் என்பது தெரிய வந்திருக்கிறது. இவர் மீது ஏற்கெனவே சில வழக்குகள் இருக்கின்றன. எனவே மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறை அவர்களை சிறையில் அடைத்தது.

சிறையில் இருக்கும் குபேந்திரன் ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில், "இந்து முன்னணி என்றால் ஒரு காலத்தில் மரியாதை இருந்தது. தற்போது காவல்துறையே பார்த்து பயப்படும் அளவுக்கு மோசமாகிவிட்டது" என்று கூறி ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இது குறித்து சோஷியல் மீடியாக்களில் பெரும் விவாதங்கள் எழுந்திருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+