ஒன்றிய அரசு என்று அழைப்பதற்கு தடை விதிக்க முடியாது.. உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!
மதுரை: மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி கருத்து தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் ஒன்றிய அரசு என்ற சொல்லாடல் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. முதல்வர் முக ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் உட்பட ஆளும் கட்சி பிரமுகர்கள் அனைவரும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைக்கிறார்கள்.
யூனியன் ஆஃப் இந்தியா என்பதன் தமிழாக்கம் ஒன்றிய அரசு என அவர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.
இவ்வாறு திமுகவினர் அழைப்பதற்கு பாஜக தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தபடி இருக்கிறார்கள். இப்படி அழைப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று அவர்கள் கருத்து கூறியுள்ளனர்.

ஹைகோர்ட் கிளையில் வழக்கு
இந்த நிலையில்தான் தமிழகத்தின் அலுவல் ரீதியான அறிவிப்புகள், நிகழ்த்தப்படும் உரைகள் போன்றவற்றில் ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்த இடைக்கால தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இவ்வாறுதான் பேச வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட இயலாது என்ற கருத்தையும் நீதிபதிகள் பதிவு செய்திருக்கிறார்கள்.

காஷ்மீர் போல மாறிவிடும் என வழக்கு
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ராமசாமி என்பவர், மதுரை ஹைகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். தமிழகத்தில் தற்போது ஆட்சி அமைத்திருக்கும் திமுக அரசு, இந்திய அரசை ஒன்றியம் என்ற பெயரால் அழைத்து வருகிறது. திமுக கட்சியில் உறுப்பினராக ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் நிலையில் அவர்கள் ஒவ்வொருவரும் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் இந்த சொல்லாடல் உள்ளது, எனவே இதுகுறித்து விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு எடுக்கப்படவில்லை எனில் இது தவறான முன்னுதாரணமாக அமைந்து ஜம்மு காஷ்மீர் போல பிரிவினை ஏற்பட வாய்ப்பாக அமைந்துவிடும்.

தலைமைச் செயலாளர் அறிவிக்க கோரிக்கை
இவற்றை கருத்தில் கொண்டு தமிழக தலைமைச் செயலர், அலுவல் ரீதியான அறிவிப்புகள், நிகழ்த்தப்படும் உரைகள் போன்றவற்றில் ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் தமிழக அரசின் அறிவிப்புகளில் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் வகையில் வாசகங்கள் இடம்பெற அறிவுறுத்த வேண்டும். இதுகுறித்து மாநில அரசுக்கு, நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

நீதிமன்ற வாதம்
இந்த வழக்கு, நீதிபதிகள், டி.எஸ்.சிவஞானம் மற்றும் எஸ்.ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா அல்லது பாரதம் என்ற இரண்டு வார்த்தைகள் பயன்பாட்டில் உள்ளன. அவ்வாறு இருக்கையில் அதில் இல்லாத ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறானது என வாதிட்டார்.

கொரோனா தடுப்பூசிக்கே கட்டாயம் இல்லை
இதைக் கேட்ட நீதிபதிகள், கொரோனாவுக்கான தடுப்பு ஊசியை எடுத்துக் கொள்வதையே கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவ்வாறு இருக்கையில், "இப்படித்தான் பேச வேண்டும்" என்று, எவ்வாறு உத்தரவிட முடியும் என கேள்வி எழுப்பினார்கள்.
Recommended Video

முதல்வர் உறுதி
மனுதாரர் தரப்பில் முன் வைத்த வாதத்தில், சட்டமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது முதலமைச்சர் ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறில்லை, அவ்வாறு தொடர்ந்து அழைப்போம் என தெரிவித்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

ஒன்றிய அரசு
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த தங்கள் உத்தரவில், மனுதாரர் கூறும் வகையில், முதல்வரும், அமைச்சர்களும் இவ்வாறு தான் பேச வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட இயலாது. தமிழக மக்களுக்கு மனுதாரர் எதை கற்றுக் கொடுக்க விரும்புகிறார் என்று தெரியவில்லை. எனவே ஒன்றியம் என்று கூறுவதை தடை செய்து உத்தரவிட முடியாது எனக் குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications