பிள்ளைகளை படிக்க வைப்பது காதலிக்க அல்ல.. வயதான பெற்றோரை தவிக்கவிடலாமா? மதுரை நீதிபதிகள் கருத்து!
மதுரை: காதல் திருமணம் என்பது பங்குச்சந்தை போல் ஏற்றமும், இறக்கமும் கொண்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். காதலிக்கும் பிள்ளைகள் பெற்றோரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், காதல் திருமணம் செய்து கொள்பவர் வயதான பெற்றோரை தவிக்க விடலாமா என்றும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
திருச்சியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனைக்கு சொந்தமான மருந்தகத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர் சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்த போது, திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. இதையடுத்து அச்சம் அடைந்த பெற்றோர், மகள் காணாமல் போனது தொடர்பான திருச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் காணாமல் போன மகளை மீட்டு ஆஜர்படுத்தக் கோரி அந்த பெண்ணின் தந்தை கருப்பண்ணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மாயமான பெண்ணை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இந்த நிலையில் இன்று மீண்டும் நீதிபதிகள் வேல்முருகன், ஜோதிராமன் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாயமானதாக சொல்லப்பட்ட இளம்பெண் காணொலி வாயிலாக நீதிபதிகள் முன்னிலையில் ஆஜராகினார். அப்போது அந்த பெண், நான் உடன் பணிபுரிந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வருகிறேன். என்னை யாரும் கடத்திச் செல்லவில்லை என்று தெரிவித்தார்.
இதன்பின் நீதிபதிகள், குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பெற்றோர் படிக்க வைக்கின்றனர். பிள்ளைகளை படிக்க வைப்பது காதலிக்க அல்ல.. காதலிக்கும் பிள்ளைகள் பெற்றோரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். காதல் திருமணம் என்பது பங்குச்சந்தை போல, ஏற்றமும் இறக்கமும் உண்டு. மனுதாரரின் மகள் விரும்பியவருடன் செல்வது தனிப்பட்ட விருப்பம்.
ஆனால் பெற்றோரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். பெண் நன்றாக படித்துள்ளார். பெற்றோருக்கு தகவல் கூறியிருக்க வேண்டும். உங்கள் பெற்றோர் உங்களை நீதிமன்றத்தில் இப்படி காணொளி வழியாக பார்க்க செய்வதா? காதலை எடுத்து சொல்லி சமாதானம் செய்ய முயற்சித்திருக்கலாம். பெற்றோரும் தற்போதைய காலகட்டத்தை அறிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
தொடர்ந்து, இளம் பெண்ணிடம் கணவருடன் சென்று பெற்றோரை சமாதானம் செய்யுங்கள் என்றும் அட்வைஸ் செய்தார். பின்னர் பெற்றோர் தரப்பில், நாங்கள் வயதானவர்கள்.. எங்களை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை என்று கண்ணீர் சிந்தினர். அதற்கு நீதிபதிகள், உங்கள் மகள் உரிய வயதை எட்டிவிட்டார், அவர் திருமணமாகி கணவருடன் சென்றுவிட்டார். இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications