"வணக்கம்டா புள்ளை .. கொடூரமா".. மதுரை இன்ஸ்டாகிராம் பிரபலத்துக்கு கத்திக்குத்து.. கடும் மோதல்
மதுரை: ரீல்ஸ் எடுக்கும் விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் மதுரையை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ‛பிளாக் பாண்டா' அஜித் குமாருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. இதில் காயமடைந்த அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது சிறுவர்கள் முதல்வர் பெரியவர்கள் வரை பலரும் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் பிரபலமானவர் தான் அஜித் குமார்.

இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமாக உள்ளார். ‛பிளாக் பாண்டா' என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இவர் மதுரை வட்டார மொழியில் பேசி வீடியோ வெளியிட்டு வருகிறார். குறிப்பாக ‛‛வணக்கம்டா புள்ளை.. கொடூரமா'' என்று கூறி அவர் போடும் வீடியோக்களுக்கும், அதன்பிறகு டைமிங்காக சொல்லும் வரிகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் மதுரையின் மண்வாசம், கலாசாரம், கிராமத்து வாழ்க்கை மற்றும் காமெடி வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
அஜித் குமார் இன்ஸ்டாகிராமில் சுமார் 194K பாலோயர்ஸ்களை வைத்துள்ளார். இந்நிலையில் தான் தற்போது அஜித் குமார் கத்திக்குத்து காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதாவது இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதற்காக அஜித் குமார் வீடியோ எடுத்துள்ளார். வீடியோ எடுக்கும் விஷயத்தில் அவருக்கும், பிரேம் குமார் என்பவருக்கும் இடையே திடீரென்று பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சனையை முற்றவே ஆத்திரமடைந்த பிரேம் குமார், அஜித் குமாரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் ரத்தகாயமடைந்த அஜித் குமார் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அஜித்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மேலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பிரேம் குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications