மதுரையே துள்ளுது.. என்னென்னமோ சொன்னாங்களே.. மாட்டுத்தாவணி கிட்ட பாருங்க.. தமிழக அரசின் ஸ்வீட் நியூஸ்
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் டைடல் பார்க் எப்போது வரும் என்ற கேள்வி வலம்வந்த நிலையில், அதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
மின் உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி அக்டோபர் 16-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
மின்கட்டண உயர்வு : அதுமட்டுமல்ல, மின்கட்டண உயர்வை அரசு திரும்பப் பெறாவிட்டால் மதுரை உட்பட தென்மாவட்டங்களில் வேலை வாய்ப்பு வழங்கி வந்த சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நலிவடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மற்றொருபுறம், மதுரையில் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இருந்தாலும், அந்த நிறுவனங்களில் முதல்நிலை ஐடி ஊழியர்களுக்கு வேலை வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ளன..
இப்படிப்பட்ட சூழலில்தான், முதல்வராகப் பொறுப்பேற்றதுமே, மாட்டுத்தாவணி அருகே 5 ஏக்கரில் ரூ.600 கோடியில் புதிய டைடல் பார்க் அமைக்கப்படும் என்றும், இதன் மூலம் 10,000 பேர் வேலை வாய்ப்புப் பெறுவார்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் டைடல் பார்க்குக்கு மதுரை மாட்டுத் தாவணி அருகே மாநகராட்சியும் 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி எல்காட்டிடம் ஒப்படைத்தது. எனினும்,
மாட்டுத்தாவணி: ஏற்கெனவே மாட்டுத்தாவணியில் பஸ் ஸ்டாண்டு, ஆம்னி பஸ் ஸ்டாண்டு, தனியார் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், நெல் வணிக வளாகம், காய்கறி, பழம், பூ, மீன் மார்க்கெட்கள் என நிறைந்துள்ளதால், இதே இடத்தில் டைடல் பார்க் தேவையா? என்றும் பரவலான கேள்வி உள்ளது.. எனினும், டைடல் பார்க் சம்பந்தமான நடவடிக்கைகள் துரிதமாகாமலேயே இருந்தன.. இதற்காக அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழுவும், என்ன ஆனது? எப்போது டைடல் பார்க் ஆரம்பிக்கப்படும் என்பதும் தெரியவில்லை.
கட்டுமான பணிகள்: இப்படிப்பட்ட சூழலில்தான், அதற்கான பணிகள் எப்போது துவங்கப்படும் என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் கட்டுமான பணி துவங்கப்படும் என தமிழ்நாடு அரசு எல்காட் அதிகாரிகள் உறுதி தெரிவித்துள்ளனர்.. அத்துடன், சென்னை, பெங்களூர், மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள முன்னணி நிறுவனங்கள் மதுரைக்கு வரப்போகிறார்களாம்..
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் அமையவிருக்கும் புதிய டைடல் பார்க் வேலைப்பாடுகள் முடிவடைந்த பிறகு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் டைடல் பார்க் அமைப்பதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தாலும் அரசு இந்த ஏற்பாடுகளை முன்னெடுத்து செல்லும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

டைடல் பார்க்: இதனிடையே, மதுரை மாநகராட்சி ஆணையர் பிரவீன் குமார் இது குறித்து முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில், "மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிறுத்தம் அருகில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டு கட்டமாக டைடல் பார்க் அமைய இருக்கிறது. முதல் கட்டமாக 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அந்த நிலத்தை கையகப்படுத்துவதில் சில சிக்கல்கள் இருந்த நிலையில் தற்போது அவை அனைத்தும் நீதிமன்றத்தின் மூலம் தீர்க்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, எல்காட் அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் டைடல் பார்க் அமைய இருக்கும் மாட்டு தாவணிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியதையடுத்து, அது தொடர்பான அறிக்கையை முனிசிபல் அட்மினிஸ்ட்ரேஷன் துறைக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.. டைடல் பார்க்கில் மதுரை மாநகராட்சியின் பங்களிப்பு 51 சதவீதமும், தனியார் பங்களிப்பு 49 சதவீதமும் இருக்கும்.
ஆய்வறிக்கை: இந்த பணிகளுக்காக தமிழ்நாடு அரசு எல்காட் அதிகாரிகள் வழங்கிய ஆய்வறிக்கையை ஏற்று விரைவில் அரசாணை வெளியிட்டு, நிலத்தை பிளாட்களாக பிரிப்பது போன்ற பணிகள் நடைபெற உத்தரவிடப்படும். அதன்பிறகு கட்டுமான பணிகள் வேகம் எடுக்கும்" என்றார்..
இத்தனை நாளும் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்பட்ட மதுரை மாட்டுத்தாவணி புதிய டைடல் பார்க் திட்டமானது, துரிதமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.. அத்துடன், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அமைய போவதால், இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம்












Click it and Unblock the Notifications