மதுரை மேயர் விவகாரம்.. அதிமுக திட்டத்தை அறிந்த திமுக தலைமை.. பொங்கலுக்குள் முடியும் பஞ்சாயத்து!
மதுரை: பொங்கல் பண்டிகைக்குள் மதுரை மாநகராட்சிக்கான புதிய மேயரை நியமனம் செய்ய திமுக தீவிரம் காட்டி வருகிறது. மேயர் நியமனம் தொடர்பான பிரச்சனையை மக்களிடம் கொண்டு செல்ல அதிமுக தயாராகி வந்த சூழலில், திமுகவினரின் நடவடிக்கை மதுரை அதிமுக நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி சொத்து வரி ஊழல் விவகாரத்தில் மேயர், 5 மண்டலத் தலைவர்கள், 2 நிலைக்குழுத் தலைவர்கள் பதவி விலக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணையும் நடைபெற்றது. அதன் உச்சமாக மேயர் இந்திராணி கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டார். இதன்பின் அக்டோபர் 17ஆம் தேதி இந்திராணியும் மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதன்பின் மதுரை மாநகராட்சியின் புதிய மேயர் யார் என்ற கேள்வி எழுந்தது. சுமார் 4 மாதங்களாக மேயர் யார் என்பதை அறிவிக்காமல் திமுக அமைதி காத்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மதுரை மாவட்டத்திற்கு ஏராளமான முறை வந்துவிட்ட போதும், மேயர் விவகாரத்தை கண்டுகொள்ளவே இல்லை.
இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக மதுரை மேயர் நியமனம் செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் சட்டசபைத் தேர்தல் வரை காலம் தாழ்த்தினால், அதிமுகவினர் அதையே பிரச்சாரமாக முன்னெடுப்பார்கள். ஏற்கனவே பொங்கல் பண்டிக்கைக்கு பின் மாநகராட்சி மேயர் விவகாரத்தை கையில் எடுத்து பேரணி நடத்த திட்டமிட்டு வந்தது.
இதனை உணர்ந்து கொண்ட திமுக உடனடியாக மேயர் நியமன விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதனால் அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பிடிஆர் இடையிலான சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. இறுதியாக மூர்த்தியின் ஆதரவாளர் ஒருவரை மேயராக கொண்டு வரும் திட்டத்திற்கு திமுக வந்துள்ளது.
இதனால் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க முதல்வர் ஸ்டாலின் வரும் போது, மேயர் நியமனம் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்று திமுகவினர் கூறுகின்றனர். ஆனால் மண்டலத் தலைவர்கள் தொடர்பான அறிவிப்பு தேர்தலுக்கு பின்னரே வெளியாகும் என்றும் சொல்கின்றனர்.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications