மதுரை மேலப்பாளையத்தில்...மனைவிக்கு சிலை..தொழிலதிபர் அசத்தல்!!
மதுரை: மதுரை மேலப்பொன்னகரத்தை சேர்ந்தவர் பிரபல தொழிலதிபரான சேதுராமன் தனது ஆசை மனைவி பிச்சைமணி அம்மாளுக்கு பைபர் மெட்டீரியலில் சிலை அமைத்துள்ளார்.
கடந்த ஆகஸ்டு 8ஆம் தேதி சேதுராமன் மனைவி பிச்சைமணி அம்மாள் காலமானார். தனது ஆசை மனைவி தன்னை விட்டுச் சென்றாலும், தனது வீட்டில் அவரது உருவம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று சேதுராமன் நினைத்தார். அதை செயலிலும் கொண்டு வந்தார். அவருக்காக சிலை வடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

அதன்படி மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சிற்பி பிரசன்னா மற்றும் ஓவியர் மதுரை மருதுவை அணுகி தனது எண்ணத்தை தெரிவித்துள்ளார். அவர்களும் ஆலோசனை வழங்கினர். அதன்படி, பைபர் மெட்ரியல் மூலம் நவீன தொழில்நுட்பத்தில் 6 x 3 அடி உயரம் உடைய பிச்சைமணி அம்மாள் சிலையை வடிவமைத்தனர். இது நிரந்தரமாக இருக்கும் வகையில் சேதுராமன் வீட்டுக்குள்ளேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிச்சைமணி அம்மாள் இறந்து 30 ஆம் நாட்கள் முடிந்த நிலையில், அவரது சிலைக்கு பூ போட்டு உறவினர்கள் வணங்கினர். திருப்பரங்குன்றம் சட்டசபை உறுப்பினரும், மருத்துவருமான பி. சரவணனின் மாமியார்தான் பிச்சைமணி அம்மாள் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மாமியாரின் சிலைக்கு இன்று சரவணனும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
முன்பு காலமானவர்களின் புகைப்படத்தை வணங்குவது வழக்கமாக இருந்தது. தற்போது, சிலை அமைத்து வழிபடுவது வழக்கமாகி வருகிறது. சமீபத்தில் கர்நாடகாவிலும் உயிரிழந்த தனது மனைவி மாதவிக்கு தொழிலதிபரும், அவரது கணவருமான ஸ்ரீநிவாஸ் குப்தா சிலை அமைத்து இருந்தார். இந்த சிலை சிலிகானால் அமைக்கப்பட்டு இருந்தது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications