மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"இ.எம்.ஐ தவணை தள்ளி வைப்பு நிவாரணம் அல்ல... தண்டனையே" வெங்கடேசன் எம்பி ஆவேசம்

Google Oneindia Tamil News

மதுரை: வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்த தள்ளுபடி நிவாரணம் அல்லாமல் தண்டனையாகவே உள்ளதாக மதுரை எம்பி சு. வெங்கடேசன் வேதனை தெரிவித்துள்ளார்.

Recommended Video

    3 மாத EMI-ஐ தள்ளிப்போடுபவர்களின் கவனத்திற்கு...

    வட்டி தள்ளுபடி செய்யாவிட்டால் ரிசர்வ் வங்கி அறிவித்த 3மாத இஎம்ஐ சலுகையால் சிறிதளவும் பலன் கிடையாது என்பது தெரியவந்துள்ளது. மாறாக கடன் சுமையையும் கடுமையாக அதிகரிக்க உள்ளது.

    இதையடுத்து வங்கிகளில் தனிநபர் கடன், வீட்டுக்கடன், வாகன கடன் வாங்கியவர்கள்,. வட்டி தள்ளுபடியை வங்கிகள் அறிவிக்கும் வகையில் ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடன் சுமையில் தங்களை காக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

    இஎம்ஐ தவணைகள்

    இஎம்ஐ தவணைகள்

    இந்நிலையில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் வட்டி தள்ளுபடி செய்யப்படாததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: " நிதி நிறுவனங்களின் கடன் மீதான இ.எம்.ஐ தவணைகள் மூன்று மாதங்களுக்கு வசூலிக்கப்படாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. நான் உட்பட பல அரசியல் தலைவர்கள் எழுப்பிய கோரிக்கையே இது. ஆனால் இந்த அறிவிப்பின் மகிழ்ச்சி இன்று பாரத ஸ்டேட் வங்கி தனது இணைய தளத்தில் விடுத்துள்ள அறிவிப்பின் மூலம் திருடப்பட்டுள்ளது.

    இஎம்ஐ தவணைகள்

    இஎம்ஐ தவணைகள்

    இந்நிலையில் ' ரிசர்வ் வங்கியா.. கந்துவட்டிக்கடையா? ' என்ற பெயரில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் வட்டி தள்ளுபடி செய்யப்படாததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: " நிதி நிறுவனங்களின் கடன் மீதான இ.எம்.ஐ தவணைகள் மூன்று மாதங்களுக்கு வசூலிக்கப்படாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. நான் உட்பட பல அரசியல் தலைவர்கள் எழுப்பிய கோரிக்கையே இது. ஆனால் இந்த அறிவிப்பின் மகிழ்ச்சி இன்று பாரத ஸ்டேட் வங்கி தனது இணைய தளத்தில் விடுத்துள்ள அறிவிப்பின் மூலம் திருடப்பட்டுள்ளது.

    இஎம்ஐ கணக்குகள்

    இஎம்ஐ கணக்குகள்

    பாரத் ஸ்டேட் வங்கி ஓர் கணக்கை தனது இணைய தளத்தில் போட்டுள்ளது. *வாகன கடன் ரூ 6 லட்சமாகவும், நிலுவை தவணைகள் 54 மாதங்கள் ஆகவும் இருப்பின் இந்த 3 மாதம் தவணை செலுத்துதல் தள்ளி வைக்கப்படுவதால் கூடுதலாக இறுதியில் ரூ 19000 கட்ட வேண்டி வரும். இது ஒன்றரை இ. எம்.ஐ தவணைகளுக்கு சமம். வீட்டுக் கடன் 30 லட்சமாகவும், நிலுவை ஆண்டுகள் 15 ஆகவும் இருக்கிற பட்சத்தில் இந்த 3 மாதம் தவணை செலுத்துதல் தள்ளி வைக்கப்படுவதால் கூடுதலாக 2.34 லட்சம் கட்ட வேண்டி வரும். இது 8 இ.எம்.ஐ களுக்கு சமம்.

    தண்டனைதான் இது

    தண்டனைதான் இது

    இந்த கணக்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள இ.எம்.ஐ தவணை தள்ளி வைப்பு நிவாரணம் அல்ல... தண்டனை என்ற அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கோவிட் 19 ஆல் நிலை குலைந்து, பரிதவித்து நிற்கிற சாதாரண, நடுத்தர வர்க்க மக்களுக்கு ஏதோ கைகளில் தருவது போல பாவனை செய்துவிட்டு அவர்களிடம் இருப்பதையும் (?) தட்டிப் பறிக்கிற குரூரத்தை அரங்கேற்றுவது என்ன நியாயம்?

    மனிதாபிமானத்துடன் நடங்கள்

    மனிதாபிமானத்துடன் நடங்கள்

    மக்கள் கேட்பது, அவர்களுக்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான்... 3 மாதம் தவணைகள் பிடிக்கப்படாவிட்டால் நிலுவைக் காலத்திலும் அதே இ.எம்.ஐ தொகையோடு 3 மாதங்கள் நீடிக்க வேண்டும் என்பதுதான்... நிதி அமைச்சரே... ரிசர்வ் வங்கி கவர்னரே... கந்து வட்டிக் காரர்களை விட மோசமாக நடந்து கொள்ளாதீர்கள்... உங்களிடம் மனிதாபிமானம் எதிர்பார்த்தது அவ்வளவு பெரிய குற்றமா? அதற்கு தண்டனையா? மக்களுக்கு கூடுதல் சுமை இன்றி உங்கள் முடிவை அமலாக்குங்கள்..." இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

    English summary
    madurai mp su venkatesan criticised reserve bank of india over bank loan emi deferment announcement
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X