5 நாட்கள் அமைதி காத்தது ஏன்? இனியாவது உண்மையை பேசுங்கள்.. ரயில்வே அமைச்சருக்கு சு.வெங்கடேசன் பதிலடி
மதுரை: மதுரை டூ தூத்துக்குடி இடையிலான அகல ரயில் பாதை திட்டத்தை தமிழக அரசு வேண்டாம் என்று கூறியதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதோடு, திட்டத்திற்கான நில எடுப்பு பணிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் 5 நாட்களுக்கு பின் மதுரை டூ தூத்துக்குடி ரயில் பாதை திட்டம் குறித்து ரயில்வே துறை அமைச்சர் கூறிய கருத்து குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், தொழிற்சாலையில் இருந்த இரைச்சல் காரணமாக செய்தியாளர்களின் கேள்வியை தெளிவாக கேட்க முடியவில்லை. இதனால் தனுஷ்கோடி திட்டம் குறித்த எனது பதிலை செய்தியாளர்கள் தவறாக புரிந்து கொண்டனர்.

மதுரை - தூத்துக்குடி ரயில்வே திட்டத்தை பொறுத்தவரை தமிழக அரசுடன் எந்த நிலப்பிரச்சனையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மதுரை எம்பி சு.வெங்கடேசன், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பேட்டியில் மதுரை - தூத்துக்குடி புதிய பாதை திட்டத்திற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்ததால், அதை கைவிடக் கூறியதால் அது கைவிடப்பட்டது என்று தெரிவித்திருந்தார்.
கடந்த இடைக்கால பட்ஜெட்டில் ரூ.100 கோடியும் வழக்கமான பட்ஜெட்டில் ரூ.18 கோடியும் ஒதுக்கி இருப்பதை நான் ஏற்கனவே சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளேன். அதற்கு முழு நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரியுள்ளேன். இப்போது அந்தத் திட்டமே கைவிடப்பட்டது என்று அவர் அறிவித்தது அதிர்ச்சியை அளித்தது. அதுவும் தமிழக அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க அது கைவிடப்பட்டதாக அவர் அறிவித்தார்.
இதற்கு தமிழக அரசு பதிலளிக்கட்டும் என்று காத்திருந்தேன். தமிழக அமைச்சரும் இந்த திட்டத்தை கைவிடச் சொல்லி தாங்கள் கூறவில்லை என்றும் ரயில்வே அமைச்சர் கூறுவது பொய் என்றும் விளக்கியுள்ளார். தாங்கள் கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என்று தான் கோரியிருந்தோம் என்று விளக்கி இருந்தார்.
இப்போது ரயில்வே அமைச்சர், "தமிழக அரசு கைவிட கோரியது தனுஷ்கோடி திட்டத்தை தான். சத்தங்களால் சரியாகப் புரிந்து கொள்ளாமல் தனுஷ்கோடி திட்டம் தான் கேட்கிறார்கள் என்று நினைத்து தமிழக அரசு கைவிடக் கூறியதாக கூறிவிட்டதாகவும், உண்மையில் தூத்துக்குடி திட்டம் கைவிடப்படவில்லை என்றும் அதற்கு நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியது அனைத்து ஊடகங்களிலும் ஒரே மாதிரியாக வந்துள்ள போது, சத்தத்தால் குழப்பம் ஏற்பட்டதாக அமைச்சர் சொல்வது ஏற்கக் கூடியதாக இல்லை. செய்தியாளர் சந்திப்பின் காணொலியும் மிகத்தெளிவாகவே உள்ளது. அமைச்சர் வேண்டுமென்றே தமிழக அரசின் மீது பழிபோடவே அவ்வாறு கூறினார் என்று எண்ணத் தோன்றுகிறது.
உண்மை அப்படி இருக்கும் பட்சத்தில் ஊடகங்களில் வந்த செய்தியை உடனடியாக ஏன் மறுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. எல்லா விமர்சனங்களுக்குப் பிறகு ஐந்து நாட்களுக்குப் பின் இப்போது தான் ரயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளது. இப்படித்தான் அவர்கள் நாடாளுமன்றத்தில் எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு திசை திருப்பும் பதில் அளிக்கிறார்கள். மழைக்கால கூட்டத்தொடரில் ரயில்வே அமைச்சர் அவையில் பேசிய ஆவேச பேச்சு மோசமான பதிலுக்கு நல்லதொரு உதாரணம்.
அதே போன்ற தொனியில் தான் தமிழ்நாடு அரசின் மீது பழி கூறிய அமைச்சரின் பேச்சும். புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமானம் 30 சதம் பலமற்று இருக்கிறது என ரயில்வே பாதுகாப்பு அமைப்பு குற்றம் சாட்டியபோது வாய்திறக்காத பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சரின் பொய்யான தகவலை நம்பி வேகவேகமாக போராட்டத்தை அறிவித்துள்ளார். அவரை தொடர்ந்து அதிமுகவும் போராட்டத்தை அறிவித்தது.
உண்மையில் மத்திய அரசு ரயில்வே துறையில் தமிழ்நாட்டை தொடர்ந்து எப்படி புறக்கணித்து வருகிறது என்பதை பற்றி அடிப்படை புரிதல் இருக்கும் யாரும் அமைச்சரின் பேச்சு எவ்வளவு அபத்தம் என்பதை ஆராயாமலே புரிந்து கொள்ள முடியும். ரயில்வே அமைச்சகமும் ரயில்வே அமைச்சரும் மக்கள் மத்தியில் உண்மையைப் பேச இனியாவது முன் வர வேண்டும். அந்த அளவு முயற்சிப்பது கடினம் என்றால் குறைந்த பட்சமாக மதுரை - தூத்துக்குடி திட்டத்திற்கான நிதியையாவது வரும் பட்ஜெட்டில் போதுமான அளவு ஒதுக்கி நியாயம் வழங்க முயற்சிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications